திங்கள், 15 மே, 2017

இந்தி தேசமா? இந்திய தேசமா? Is Hindi National Language of India? | Lenin Talks


Govi Lenin இந்தியாவின் ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர் அப்துல்கலாம். இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் இன்றைய கேரள ஆளுநர் சதாசிவம். சந்திரமண்டலத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பிய இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர்கள் மூவரும் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள். இந்தி மொழியை (கட்டாயப் பாடமாகப்) படிக்காதவர்கள். இந்த 3 தமிழர்கள் வகித்த பதவிகளைவிட வேறு எந்த உயர்பதவியைப் பிடிக்க இந்தி கட்டாயம் என்கிறது மத்திய அரசு? திணிக்கப்படும் எதுவும் வாந்தியாகத்தான் வெளிப்படும். வாழ்க்கைச் சூழலுக்குத் தேவைப்பட்டால் எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு அப்துல்கலாம் தொடங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் வரை எளிமையான பல தமிழர்களும் எடுத்துக்காட்டுகளாக இருக்கிறார்கள். இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக இன்று வங்காளிகள், மராட்டியர்கள், கன்னடர்கள் எனப் பல மாநிலத்தவரும் குரல் எழுப்புகிறார்கள்.
இந்த குரலைத்தான் 1938ஆம் ஆண்டு முதலே தொலைநோக்குப் பார்வையோடு எழுப்பி வருகிறது தமிழகம். கூடுதல் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ள காணொளி உதவும்

கருத்துகள் இல்லை: