ஞாயிறு, 14 மே, 2017

போக்குவரத்து தொழிலாளர்களின் 6460 கோடி நிலுவையில் ... ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.. பணிப்புறக்கணிப்பு!

savukkunews:   போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் 1480 கோடி. வருங்கால வைப்பு நிதி நிலுவை 2200 கோடி. இது போல தொழிலாளர்களுக்கு வழங்காமல் போக்குவரத்து நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருக்கும் மொத்த தொகை 6460 கோடி.
தமிழகத்தில் பொது மக்கள் அனைவரும் காரிலும் சொகுசு வாகனங்களிலும் பயணிப்பதில்லை. பெரும்பாலானோர் அரசு போக்குவரத்து பேருந்துகளையே நம்பி உள்ளனர். அப்படி இருக்கையில் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது என்று அரசு பஞ்சப் பாட்டு பாடுகிறது. தொழிலாளர்களுக்கு 6460 கோடியை நிலுவையில் வைத்திருந்தால் அவர்கள் எப்படித்தான் வாழ்வை நடத்துவார்கள் ? ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களது 58 வயதில் நிலுவைத் தொகையை வழங்காமல் வைத்திருந்தால் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் பிச்சையா எடுப்பார்கள் ? அரசின் நிதியை இட்லி விற்பதற்கும், இலவச லேப்டாப் வழங்குவதற்கும், ஆடு மாடு வழங்குவதற்கும் பயன்படுத்தினால், உழைக்கும் அதன் ஊழியர்களை பட்டினிதான் போட நேரிடும். 
போராட்டத்த விட்றாதீங்க.. எடப்பாடிய மிரட்டி வாங்க முடியலைனா இனி யாரு ஆட்சிக்கு வந்தாலும் வாங்குறது கஷ்டம்..

2015ம் ஆண்டிலேயே தமிழகத்தின் மொத்த கடன், இரண்டு லட்சத்து இருபதாயிரம் கோடியை தாண்டி விட்டது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபோதே அபாய மணி ஒலித்தது. ஆனால் இதன் பேராபத்தை 2011 முதல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் புரிந்து கொள்ளவில்லை. அதன் அடிமைகளும் புரிந்து கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இன்றைய போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்.
பல ஆண்டுகளாக காத்திருந்து எந்த நிலுவைத் தொகையும் கிடைக்காத ஒரு கையறு நிலையில்தான் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் கோரிக்கைகள் நியாயமானதே. போராட்டத்தின் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை. இன்றைக்கு பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கான காரணம் 2011 முதல் ஆட்சி பீடத்தில் இருந்தவர்களே தவிர, தொழிலாளர்கள் அல்ல

கருத்துகள் இல்லை: