செவ்வாய், 16 மே, 2017

சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானில் இந்திய உளவாளி இன்று விசாரணை

BBC :நெதர்லாந்தின்’த ஹேக்’ நகரில் உள்ள
சர்வதேச நீதி மன்றத்தில், உளவுபார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியை பாகிஸ்தான் தூக்கிலிடுவதைத் தடுக்க வேண்டும் என இந்தியா இன்று வாதிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் குல்புஷன் ஜாதவை சந்திக்க, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் ராஜரீக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது; ஆனால் தாங்கள் சட்டரீதியான நடைமுறைகளை சரியாக கடைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பொதுவாக பாகிஸ்தானுடனான தனது கடினமான உறவில் எந்த ஒரு சர்வதேச அமைப்பையும் இந்தியா எளிதில் ஈடுபடுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: