திங்கள், 15 மே, 2017

கணவன் கொடுமையினால் இளம்பெண் தற்கொலை! விடியோ இறுதி பேச்சு..


பாலியல் வன்கொடுமைகளாலும், வரதட்சனை கொடுமைகளாலும், சாதி ஆனவத்தினாலும் நித்தம் நித்தம் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதும், கொலை செய்யப்படுவதும், நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கவுரி என்கிற இளம் பெண், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பேசிய வீடுயோ, வைரலாகி ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.திருவாரூர் மாவட்டம் மாவட்டம் கோயில்வண்ணியை அடுத்துள்ள சித்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரும்விவசாயி முருகப்பன். அவரது மனைவி கவுரி, தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன நான்காவது மாதத்தில் முருகப்பனின் கொடுமை தாங்காமல், தந்தை வீடான நீடாமங்கலத்தை அடுத்துள்ள ராயாபுரத்திற்கே வந்துவிட்டார். இதற்கிடையில் விவாகரத்து கேட்டு வழக்கும் போட்டிருந்தார்.  விவகாரத்தை இலகுவாக வழங்குவது மட்டுமே இதுபோன்ற பெண்களின் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும் ..
தீர்ப்பு வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு, கவுரியையும், அவரது பெற்றோர்களையும் சந்தித்த முருகப்பன், இனிமேல் நான் எந்த தவரும் செய்யமாட்டேன், குடிக்கமாட்டேன், கொடுமை செய்யமாட்டேன், எனக்கு கவுரியைவிட்டா யாரு இருக்கா, என குடிமகன்களுக்கே உள்ள பாணியில் கலர், கலரான ரீல்களை வீட்டிருக்கிறார். அதை நம்பிய கவுரி குடும்பம் தங்களின் ஏழ்மையை மகளுக்கு எடுத்து சொல்லி அனுப்பியுள்ளனர்.  அவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரித்திஷா என்கிற பெண்குழந்தையும் இருக்கிறது.
<இந்நிலையில் கடந்த 5 ம்தேதி கவுரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், அதற்கு முன்பு அவரது செல்போனில், தனது சாவிற்கான காரனத்தை வாக்குமூலமாக  பதிவிட்டு சென்ற வீடியோ தற்போது கிடைத்து பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிவருகிறது.nbsp; சாவதற்கு ஆயத்தமான கவுரி, முதலில் சாமி கும்மிட்டுவிட்டு, நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு தனது செல்போன் வீடியோவை ஆன் செய்து, எதிரே உள்ள கண்ணாடி ஸ்டாண்டில் சரியாக வைத்துவிட்டு தனது ஆதங்கத்தை பத்திவிட்டார். அவரது பதிவில் முதலில் வந்த வார்த்தை அம்மா என்பது தான், ‘’ அம்மா, அப்பா,தம்பிக்கு பாய் சொன்னவர், பாப்பாவ பத்திரமா பாத்துக்கம்மா, பாப்பாவ விட்டுடாதம்மா, அவளுக்கு உங்களவிட்டா யாரும் இல்லம்மா, எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி, வாழவே பிடிக்கல.. அதனாலதான் இந்த முடிவெடுக்கிறேன். என்ன மன்னிச்சிடு அம்மா, எம்மேல கோபப்படாத அம்மா. முருகப்பன் படுபாவிம்மா, அவன் மனுசனே கிடையாது, மிருகம்மா, அழச்சிட்டு வந்ததுல இருந்து வாயால அந்த பாடுபடுத்துறான்ம்மா, வார்த்தையாலயே நோகடிக்கிறான்ம்மா, படாத அவஸ்தை, சித்தரவதை படுத்துறான்ம்மா, உனக்கு தெரிஞ்சி பாதி, தெரியாம எவ்வளவோ இருக்குமா, ரொம்ப கஸ்டப்பட்டுட்டேன்.  நான் போறேம்மா, நம்ம பாப்பாவ மட்டும் பார்த்துக்கோங்கம்மா, இதுவரைக்கும் உன்கிட்ட சொல்லாம எதையுமே செய்ததில்ல.  இத செய்யபோறேன் பாய்மா. ‘’ என்றே அவரது குரல் தழுதழுத்து தொடருகிறது.

அழுகையை நிறுத்திக்கொண்டு சிவந்த கண்களோடு, விரக்தியான மனதோடு கோபத்தில் முகம் சிவந்தவராக, இரண்டுகைகளையும் கும்மிட்டவாரு, கனவனான முருகப்பனிடம்,’’ முருகப்பன் உங்ககிட்ட நான் இதுவரைக்கும்  எதுவும் கேட்டதில்ல, இனிமேலும் கேட்கமாட்டேன். இறுதியா ஒன்னுமட்டும் கேட்கிறேன் , என் குழந்தையை என் பெற்றோரிடம் ஒப்படச்சிடுங்க, அவங்க எம்பொண்ண பத்திரமா பாத்துக்குவாங்க, ப்ளீஸ், ப்ளீஸ்,,….. என பலமுறை சொல்லிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிரியில் தூக்கிட்டுக்கொள்கிறார் கவுரி.an>இந்த வீடியோ ஆதாரத்தைக்கொண்டு முருகப்பன் மீது நீடாமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மகளின் இறப்பு குறித்து கவுரியின் தந்தை கவுதமனிடம் கேட்டோம்,’’ முருப்பன் எங்களுக்கு தூரத்து சொந்தம், அவருக்கு மூலநட்சத்திரம். 40 வயசு வரைக்கும் பொண்ணுக்கிடைக்காம அலைஞ்சாங்க, எங்க பொண்ணு கவுரிக்கும் மூலநட்சத்திரம் தான் அத தெரிஞ்சிக்கிட்டு வந்து பொண்ணுக்கேட்டாங்க, நாங்க தினக்கூலி, அன்றாடம் வாழ்க்கைய ஓட்டவே சிறமப்படுறேன், நீங்க ரொம்ப வசதியா இருக்கீங்க, உங்க அளவுக்கு எங்கலால முடியாது, அதோட கவுரிக்கு 22 வயசுதான் ஆகுது,  18 வயசு வித்தியாசம் சரிவராதுன்னு சொல்லி மறுத்திட்டேன். அவங்க எங்கல விடுறதா இல்ல, ‘ கவுரிய எங்க பொண்ணாட்டம் பாத்துக்குவோம், நீங்க எதுவும் செய்யவேணாம் போண்ண மட்டும் அனுப்புங்க, எங்ககிட்ட வசதியிருக்கு அவள மகாராணிமாதிரி வச்சிக்கிறோம்னு சொன்னாங்க, நாமதான் ஏழையா இருக்குறோம், நம்ம பொண்ணாவது வசதியான வீட்டுல வாழட்டுமேன்னு, அங்க இங்க கடணவாங்கி 5 பவுன் நகை போட்டேன், 50 ஆயிரம் ரொக்கமாவும், 50 ஆயிறத்திற்கு சீரு சாமானும் எடுத்துகொடுத்து வச்சோம்.

திருமணமான முதல் மாசமே கவுரிய கொடுமைபடுத்த ஆரம்பிச்சிருக்கான். நாளாவது மாசம் அவன் கூட வாழமுடியாதுன்னு எங்க வீட்டுக்கு வந்துட்டா, நாங்களும் ஜீவநாம்சம் கேட்டு நீடாமங்கலம் கோர்ட்டில் வழக்கு போட்டிருந்தோம், தீர்ப்பு வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வந்த முருகப்பன். நடந்தது நடந்துபோச்சி, இனிமேல் நான் குடிக்கமாட்டேன், கவுரிக்கு நல்ல புருசனா இருப்பேன், என எங்க மனச கரைச்சிட்டான். ஆனா கவுரி ஒத்துக்கல, நாங்க தான் தங்களின் ஏழ்மைய எடுத்துசொல்லி, அனுப்பினோம்,  நீடாமங்கலத்தில் வாடகை வீடு எடுத்து குடியிருந்தாங்க. அவனோட கொடுமையின் அளவு உச்சத்திற்கு போயிடுச்சி, மீண்டும் கோவிச்சிக்கிட்டு அப்பாவீட்டுக்கு போனா எங்களுக்கு தலைகுனிவா இருக்கும்னு இப்படி செய்துகிட்டா. ஏழைங்களா பிறந்து வசதியா வாழனும்னு நெனச்சாது தான் தப்பா போச்சி. ‘’ என கலங்கினார்

கவுரியின் உறவினர்கள் கூறுகையில், ‘’ முருகப்பன் வசதியானவன்ங்கிற திமிரவிட பக்கா குடிகாரன், நிறைய பெண்களோட பழக்கம் வச்சிருக்கான், அதோட அவனது சகோதரர் ஒருவரின் மனைவிய பர்மனண்டாவே வச்சிருக்கான். கவுரிய சம்புரதாயத்துக்கு தான் கல்யாணம் செய்துகிட்டான். திருமணமான முதல் மாதமே இதெல்லாம் தெரிஞ்சி கேட்டதன் விலைவா பல இன்னல்களை அனுபவிச்சா, கவுரியின் ஏழ்மைய அடிக்கடி சொல்லி, என் வசதிக்கு வீதிக்கு வீதி வப்பாட்டி வச்சுக்குவேன்னு இஸ்டம்னா வாழு இல்லன்னா ஓடிடின்னு சொல்லி தினசரி அடிச்சிருக்கான். கவுரிக்கிட்ட அவ இப்படி, இவ அப்படின்னு சொல்லி வெறுப்பேத்துவது வழக்கமா வச்சிருந்திருக்கான். இதுக்கு அவன் குடும்பமும் ஒத்துழைச்சிருக்கு.’’ என்கிறார்கள்.

வீடியோ குறித்து விசாரித்துவரும் மன்னார்குடி கோட்டாட்சியர் அமுதசுரபி கூறுகையில்,’’ பெண்கள் குடும்ப பிரச்சினைகளுக்கு விலைமதிக்க முடியாத உயிரை விடகூடாது. எதிர்த்து போராடவேண்டும், எதிலும் அவசர முடிவு எடுக்ககூடாது, தீவிரமாக அவசரபடாமல் நிதானமாக முடிவெடுக்கவேண்டும்,   குடும்பவண்முறையாள் பெண்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு சமுக நலத்துறை இருக்கு, சட்டம் இருக்கு, அதைவிட்டுவிட்டு இதுபோன்ற முடிவெடுப்பது சரியான தீர்வாகாது. ‘’ என்கிறார்.

முருகப்பன் உறவினரிடம் பேசினோம்,’’  முருகப்பனுக்கு திருமனத்திற்கு முன்னாடி அப்படி இப்படி இருந்திருக்கான், திருமணத்திற்கு பிறகு நிறுத்திக்கிட்டான், அதே காரனத்த வச்சிக்கிட்டு தினசரி சண்ட போடுவா, அதனாலயே குடிகாரனாகிட்டான். சொந்தவீடு பெருசா இருக்கும் போது வாடகை வீட்டுல கஸ்டபடவேனாம்னு கூப்டிருக்கான் அதுல சண்டை பெருசாகி இப்படி செய்துகிட்டா’’ என்கிறார்கள்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: