புதன், 17 மே, 2017

விஜய் டிவி... கமல் நிகழ்ச்சிக்கு வரமறுத்த ராஜ்கிரண்

கமல் அழைத்தும் ‘நோ’ சொன்ன ராஜ்கிரண்!
நூறு படங்களில் நடித்தவர் போல ஒரு இமேஜ் இருக்கிறதல்லவா ராஜ்கிரண் மீது? ஆனால் அவர் நடித்தது நாற்பதுக்கும் குறைவான படங்களில்தான்!.
தமிழ்சினிமாவின் மிக மூத்த கலைஞர் என்று ஆராதிக்கிற அளவுக்கு இருக்கிறது அவருக்கான ரசிகர் கூட்டம். மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் அவருக்கென்று ஒரு நற்பெயர் இருக்கிறது.
இந்நிலையில் ‘பணத்துக்காகத் தான் சின்னத்திரை பக்கம் வந்தேன்’ என்று ஓப்பனாகவே பேட்டியளித்திருக்கும் கமல், பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சிக்காகத் தரப்போகிறார். இதில் ஒவ்வொரு வாரமும் பிரபலங்களையும் பொதுமக்களையும் அவர் சந்தித்து பேசுவதாக நிகழ்ச்சி அமைந்திருக்குமாம். அப்படி பிரபலங்கள் லிஸ்ட் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டுள்ளதாம் விஜய் டி.வி.
அதில் ராஜ்கிரண் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். கமல் சார்பில், ராஜ்கிரணிடம் பேசப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அவரே எதிர்பார்க்காதளவுக்கு ஒரு பெரும் தொகையை தரவும் முன் வந்ததாம் விஜய் டி.வி.
ராஜ்கிரண் அவர்களை சமீபத்தில் ஒரு விளம்பரப்படத்திற்கு அழைத்த போது, *அந்தப் பொருளைப் பற்றி உபயோகிக்காமல், அதைப் பற்றி எதுவும் தெரியாமல் நான் எப்படி அதில் நடிப்பது? எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் ராஜ்கிரண், இந்த நிகழ்ச்சியையும் ஒரு விளம்பரப் படம் போல நினைத்துவிட்டாரோ என்னவோ? கமல் கூப்பிட்டபோது ‘ஐயம் ஸாரி’ என்றாராம். பேச்சு வார்த்தையில் துளி கூட முன்னேற்றம் இல்லாததால், முகம் வாடிப் போனார்களாம் அழைத்தவர்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: