செவ்வாய், 16 மே, 2017

கார்த்திக் + சிதம்பரம் வீட்டு சோதனை விபரம் ..இந்திராணி முகர்ஜியின் newsx...

The CBI raided the homes of P Chidambaram and his son Karti over granting Indrani and Peter Mukerjea's INX Media FIPB approval. ... Scenes from P Chidambaram's Chennai residence, where the CBI had conducted a raid earlier in the day. .
ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு :  வழக்கும் விவரமும்!
முன்னாள் நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இல்லம் மற்றும் அலுவலகங்களில் இன்று(16.5.2017) சிபிஐ அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது. ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் (FIPB approval) பெற்றுத் தந்ததில் கார்த்திக் சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி இவர்களுக்குச் சொந்தமான இரண்டு தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதி அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் குற்றவியல் கூட்டுச் சதி ஆகிய வழக்குகளை தொடுத்திருந்தது சிபிஐ. இதன் அடிப்படையில் தான் இன்று ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் சென்னை இல்லங்கள், மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான டெல்லி, மும்பை மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

எஃப்.ஐ.பி.பி
இந்நிலையில் எஃப்.ஐ.பி.பி விதி மீறல் என்றால் என்ன (FIPB) என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எப்.ஐ.பி.பி., விதிகளின்படி, 600 கோடி ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகை, வெளிநாட்டு முதலீடாக இருக்குமானால் மத்திய நிதி அமைச்சர் ஒப்புதல் தர வேண்டும். 600 கோடி ரூபாய்க்கு மேலான தொகையாக இருக்குமானால், வெளிநாடு முதலீடுக்கான அமைச்சரவை குழு தான் பரிந்துரை செய்ய வேண்டும். ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த கால கட்டத்தில் இந்த விதிமுறைகளை மீறி ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
கார்த்திக் சிதம்பரத்தின் தலையீடு?
நியூஸ் எக்ஸ் உள்ளிட்ட, 'டிவி' சேனல்களை நடத்தி வரும் ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி முகர்ஜி. இந்திராணியின் முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா போரா என்ற இளம் பெண் கொலை வழக்கில், பீட்டர் முகர்ஜியும், இந்திராணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு 2008 ம் ஆண்டு வெளிநாட்டு முதலீடு குறித்த அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் சிதம்பரம். அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அன்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், ஐ.என்.எக்ஸ்., மீடியா மூலம் நிதி ஆதாயம் பெற்றதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டி உள்ளது. இதன் காரணமாகவே இன்று பல்வேறு இடங்களில் சோதனை நடந்துள்ளது. கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம், 2008 ம் ஆண்டு செப்., 22ம் தேதி ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திடம் இருந்து, 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளது என சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது. இது தவிர, கார்த்திக் சிதம்பரம் மீது அமலாக்க துறையும் ஒரு புகார் தொடர்பாக கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. கார்த்திக் சிதம்பரத்தின் அன்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பத்மா விஸ்வநாதன், மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் வெளிநாட்டு முதலீடு நிர்வாக சட்டமாத்தை மீறி, 45 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளது என்பது அமலாக்க துறையின் குற்றச்சாட்டு. குறிப்பாக ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது இந்த நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளது சி.பி.ஐ.
விசாரணை வளையத்தில் சிதம்பரம்
ஆனால் நமக்குக் கிடைத்த தகவலின் படி முன்னாள் நிதியமைச்சரின் பெயர் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெறவில்லை. பெயர் தெரியாத நிதி அமைச்சக அதிகாரிகளே அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் குற்றம் நடந்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். 2006 ஆகஸ்ட் 8ம் தேதி அன்று நிறுவன சட்டம் 1956ன் படி ஐஎன்எஸ் நிறுவனத்தை பதிவு செய்ய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல் படும் எஃப்ஐபிபியை இயக்குநரை அணுகியிருக்கிறார்கள். 10 ரூபாய் பங்குகளாக 46.215 சதவிகித பங்குகள் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் பெறப்பட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்ற தகவல் சிபிஐக்கு கிடைத்திருக்கிறது. டன்னென்னன் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் மற்றும் NSR PE மொரிசியஸ் LLC மற்றும் வெர்னான் பிரைவேட் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள்தான் அந்த அந்நிய முதலீட்டை செய்துள்ளன.
ஹிந்தி பொழுது போக்கு சேனல், மற்றும் பல்நாட்டு பொழுது போக்கு சேனல்கள் உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்குதல், இயக்குதல், நிர்வகித்தல் மற்றும் ஒளி பரப்பு செய்யும் வணிகத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு அங்கீகாரத்தை ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் கோரியிருந்தது. இந்த நிறுவனம் மார்ச் 15 2007 அன்று இந்த அங்கீகாரங்களைப் பெற விண்ணப்பித்திருந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் முதலீடு வரம்பிற்கு உட்பட்டதாக இல்லை. 26% த்திற்கு அதிகமாக அந்நிய முதலீடு இருப்பதால்
இதற்கு எஃப்ஐபிபியின் தனிப்பட்ட ஒப்புதல் வேண்டும் என்று 18. மார்ச் 2007ல் எஃப்ஐபிபி கூறியிருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதல் இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது என்று கூறுகிறது சிபிஐ.
சிபிஐ குற்றச்சாட்டு
2007 ஆம் ஆண்டு மே 31 தேதியிட்ட கடிதத்தின் மூலம் FIPB இன் ஒப்புதலுக்கு முரணாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக்கு மாறாக, INX மீடியா நிறுவனம்
26% அளவிற்கு மேல் அந்நிய முதலீட்டை பெற்றுள்ளது. 10 ரூபாய் பங்குகளை 800 ரூபாய் பிரிமியத்திற்கு விற்றதன் மூலம் இந்த நிறுவனத்திற்கு சட்ட வரம்புகளை மீறி அந்நிய முதலீடு வந்து சேர்ந்துள்ளது என்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார் பெறப்பட்ட உடன், வருமான வரித்துறை விசாரணையின் மூலமும், FIPB கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூன் 26 தேதியில் செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் , மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் , FIPB ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் இல்லாமல் அந்நிய முதலீட்டை பெற்றதை நியப்படுத்த முயன்றன10 ரூபாய் பங்குகளுக்கு 800 ரூபாய் பிரீமியம் பெறப்பட்டு இந்த அந்நிய முதலீட்டை பெற்றுள்ளதை காரணமாகக் கூறி தப்பிக்க முயன்றது இந்த நிறுவனம் என்று சிபிஐ தன் எஃப்ஐஆரில் கூறியிருக்கிறது. ஐஎன்ஸ் மீடியா நிறுவனத்திம் மற்றும் எஃப்ஐபிபியிடம் கடிதம் பெற்ற பிறகு அதையும் எஃப்ஐஆரில் இணைத்துள்ள சிபிஐ, ஐஎன்எஸ் நிறுவனத்திற்கு அங்கீகாரம் பெற தன் செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் கார்த்திக் சிதம்பரம், சட்ட விரோத செயலை தெரிந்தே இவர் மேற்கொண்டிருக்கிறார். தன் அதிகார வட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி ஐஎன்எஸ் நிறுவத்திற்கு ஆதரவளித்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளது சிபிஐ. மேலும், முறையான அனுமதியை எஃப்ஐபிபியிடம் பெறுமாறு ஐஎன்எஸ் நிறுவனத்தை அறியுறுத்தியும் உள்ளது.
நன்றி டைம்ஸ் அஃப் இந்தியா
நீரஜ் சாந்துனி
தமிழில் வேட்டை பெருமாள்

கருத்துகள் இல்லை: