சனி, 20 மே, 2017

குரல் மாதிரி சோதனைக்கு டி.டி.வி. தினகரன் மறுப்பு!

குரல் மாதிரி சோதனைக்கு டி.டி.வி. தினகரன் மறுப்பு!
குரல் மாதிரி சோதனை செய்வதற்கு குரல் பதிவு செய்ய டிடிவி தினரகன் நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மே 20-ம் தேதி டெல்லியில் தன் குரலை பதிவு செய்ய நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு மே 20-ம் தேதி விசாரிக்கப்பட்டது. கைப்பற்றிய ஆடியோ பதிவுடன் டி.டி.வி. தினகரன் குரலை ஒப்பிட்டு பார்க்க காவல்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் இதை மறுத்த தினகரன், “குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய விதிகள் எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

மேலும் தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் ஒரு புதிய புகார் கூறியுள்ளனர். 5 தனக்கு ராசியான எண் என்பதற்காக அந்த தேதியில் இடைத்தேர்தல் வைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அதிகாரியிடம் தினகரன் பேரம் பேசியுள்ளார் எனவும், தினகரன், சுகேஷ் சந்திரசேகர் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட தேர்தலை மே 5-ம் தேதி நடத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் எனவும், அதற்கு சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் அதிகாரியிடம் பேரம் பேசியுள்ளார் எனவும் டெல்லி காவல் துறையினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் தினகரன் மீது மேலும் ஒரு வழக்கு டெல்லி காவல்துறை பதிவு செய்யவுள்ளது. ஆகையால், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் ஜாமீனில் வந்தாலும், இந்த புதிய வழக்கில் மறுபடியும் கைதாகி சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: