செவ்வாய், 16 மே, 2017

வியாபம் ஊழல் + கொலைகள் +மோடியின் மெகா 20,000 கோடி இயற்கை எரிவாயு ஊழல்... விபர பட்டியல்!

Prakash JP சரி, நூற்றுக்கணக்கான கோடிகளோடு, நூறுக்கும் அதிகமானோர் "கொலை" செய்யப்பட்ட பிஜேபி ஆளும் மத்திய பிரதேச மாநில வியாபம் ஊழல் குறித்து எந்த மூச்சையும் இந்த மோடி பிஜேபி அரசு விடவில்லையே..
கீழே உள்ளது பிஜேபியினரின் ஊழல் பட்டியல்..
பிஜேபியின் எடியூரப்பா, பங்காரு லட்சுமணன், ஸ்ரீராமுலு, ரெட்டி சகோதரர்கள் எல்லாம் யாரு ??? ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட சவப்பெட்டியிலேயே பிஜேபியினர் ஊழல் செய்தது மறந்துவிட்டதா???
பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் வெளிவந்துள்ள மிகப்பெரிய ஊழலான, பல நூறு மக்கள் "மர்மமான" முறையில் மரணமடைய வைத்த, "அரசு வேலைக்கு லஞ்சம்" "வியாப்பம் ஊழல்" குறித்து தெரியாதா??
மோடிக்கு நெருக்கமான "அதானி" சம்பந்தப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள்....இப்போது வெளிவந்துள்ள மோடியின் மெகா 20,000 கோடி இயற்கை எரிவாயு ஊழல்..

மோடியின் மெகா இயற்கை எரிவாயு கிருஷ்ணா-கோதாவரி வடிநில ஊழல் என்பது, இல்லாத நிலவாயுவை கிடைத்துவிட்டது என்ற மோடியின் போலியான அறிவிப்பு மூலம், குஜராத் மாநில அரசுத் துறை நிறுவனத்தைப் பயன்படுத்தி, 20,000 கோடிக்கணக்கான ரூபாயை அரசு வங்கிகளிடமிருந்து சுருட்டியதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில எரிவாயு மோசடியின் சுருக்கம்.
1. தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு ஆதரவாக ரகசிய ஆவணம் அளித்த பிஜேபி முதல்வர் வசுந்தரா...
2. மகராஷ்டிரா பிஜேபி அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு 200 கோடி ஊழலில் தொடர்பு....
3. பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் மிக பெரிய ஊழலான VYAPAM (The MP recruitment scam or Vyapam scam)... பிஜேபி முதல்வர் சவுகான் முதல் RSS தலைமைகள் வரை இந்த அரசு வேலைக்கு ஊழல், மதிப்பெண் ஊழல், தேர்வு ஊழலில் சம்பந்தப்பட்டு இருகிறார்கள்... அதிர்சிகரமாக, இந்த ஊழலில் குற்றம்சாட்டபட்டுள்ளவர்களும், சாட்சிகளும் தொடர்ச்சியாக மர்மான முறையில் மரணமடைந்து வருகிறார்கள்... இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணம்..
4. போலியான, தவறான கல்வி தகுதியளித்த பிஜேபி அமைச்சர் ஸ்மிரிதி இராணி.... (மத்திய கல்வி துறை அமைச்சர்)
5. ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசின் முதலமைச்சர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங்கின் நிறுவனத்தின், (PAR VALUE) ரூபாய் 10/- மதிப்புள்ள பங்குககளை, லலித்மோடி எனும் தேடப்படும் குற்றவாளிக்கு ஒரு பங்கை ரூபாய் 96200/- விற்றுள்ளார்... அதாவது லலித் மோடி முதலீடு செய்துள்ளார்..
6. சுமார் ஆயிரம் கோடி அபராதம் விதிகப்படகூடிய பொருளாதார குற்றவாளியான, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, இந்தியாவின் சட்டத்துக்கும், நீதிதுறைக்கும் சவால்விட்டு, வெளிநாட்டில் பதுங்கியுள்ள, லலித் மோடிக்கு "உதவி" செய்த பிஜேபி மத்திய அமைச்சர் சுஷ்மா....
7. அரசு பொறுப்பில் இருக்கும் சுஷ்மாவின் கணவரும், மகளும் அரசு வக்கீல் பதவி......
8. சட்டிஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசி வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல், பிஜேபி முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரின் மனைவி வீணா சிங்கிற்கும் தொடர்பு...
9. பிஜேபி ஆளும் குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் ஊழல்..
10. பிஜேபி ஆளும் ஹரியானாவில் பென்ஷன் ஊழல்..

கருத்துகள் இல்லை: