வியாழன், 18 மே, 2017

BBC: குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வ தேச நீதிமன்றம் தடை

உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை இறுதி முடிவெடுக்கும் வரை தூக்கிலிடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. >குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிடுவதைத் தடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு செய்திருந்த வேளையில், இவ்வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோனி ஆபிரஹாம் இன்று வழங்கிய தீர்ப்பில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் வியன்னா ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.   இனி இந்தியாவுக்கு எதிரான வழக்குகளை பாகிஸ்தான் வங்காளதேசம் நேபாளம் இலங்கை போன்ற நாடுகளும் சர்வ தேச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லக்கூடும் . மோடி அரசின் தவறான முன்னெடுப்பு . இந்தியாவின் உள்நாட்டு நீதித்துறையில் சர்வதேசம் தலையிட ஒரு வாய்ப்பு உள்ளது .. உதாரணம் யாகுப் மேனன் போன்றவர்களின் வழக்குகள் .......???

இந்தியாவின் வாதங்களை ஏற்றுக் கொண்ட ரோனி ஆபிரஹாம் மேலும் கூறுகையில், ''ஜாதவை தூக்கிலிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை குல்புஷன் ஜாதவை தூக்கிலிடக்கூடாது '' என்று தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் ரோனி ஆபிரஹாம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
குல்புஷன் ஜாதவை தூதரகம் மூலம் தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் குல்புஷன் ஜாதவை சந்திக்க, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் ராஜரீக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது;
ஆனால், தாங்கள் சட்டரீதியான நடைமுறைகளை சரியாக கடைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: