அதிமுக அரசின் முக்கிய கொள்கை முடிவு : கலைஞரின் வைரவிழா சட்டபேரவை பதிவேடுகளில் பதிவாகிவிடக்கூடது!
2017-18ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் முடிவடையும் நிலையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருக்கும்போது, சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடரைத் தமிழக ஆளுநர் இறுதி செய்து வைத்திருப்பது ஜனநாயக விரோதச்செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் இறுதி செய்து வைத்திருப்பது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மே 14ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“கடந்த ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன் தமிழக ஆளுநர் இறுதி செய்து வைத்திருப்பது அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள மிக மோசமான ஜனநாயக விரோதச் செயலாகும்.
தமிழக அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை 16.3.2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதங்கள் முடியப்போகிற நிலையில், இன்னும் துறை சார்ந்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவில்லை. அதன்மீது சட்டப்பேரவை விதிகளின்படி வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. ஆனால் திடீரென்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் மட்டும் இறுதி செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நிர்வாகத்தை மட்டுமல்ல, சட்டப்பேரவை ஜனநாயகத்தையும் சீர்குலைக்காமல் விட மாட்டோம் என்ற மனப்போக்கில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு வஞ்சக எண்ணத்துடன் செயல்படுகிறது.
வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்வது, அது தொடர்பாக துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடத்துவது, பிறகு அவற்றை வாக்கெடுப்புக்கு விடுவது போன்ற மிக முக்கியப் பணிகள், வரவு - செலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்காகக் கூட்டப்படும் கூட்டத்தொடருடன் தொடர்புடையது. மானியக் கோரிக்கைகளுக்கு இசைவு அளிக்கவோ, மறுக்கவோ உள்ள அதிகாரம் சட்டப்பேரவைக்கு மட்டுமே உண்டு என்பதைத் தமிழக சட்டப்பேரவை விதிகள் மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. வரவு - செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகளின் விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2017-18ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத்திட்டம் ஆகாயத்தில் அந்தரத்தில் தொங்குவது போன்ற நிலை உருவாகியிருக்கிறது. இதுகுறித்து, ஆளுநர் இந்த அரசை தட்டிக் கேட்காமல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இறுதி செய்து வைத்திருப்பது தமிழகத்தைப் பற்றியும், தமிழக மக்களின் நலன் பற்றியும் யாருக்கும் கவலையில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வரவு - செலவுத்திட்டம் பற்றிய விவாதங்கள் பத்து நாள்களுக்குக் குறையாமலும், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்கள் 30 நாள்களுக்கும் நடைபெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை விதிகளில் விளக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் முடிந்து மானியக் கோரிக்கைகள் அனைத்தும் சட்டப் பேரவையால் ஏற்கப்பட்டவுடன் ‘நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு’ கொண்டு வரப்படும் என்றும், நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படும் என்றும் அரசியல் சட்டப்பிரிவு 204 தெளிவுபடுத்துகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால், தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த வைர விழாவை சட்டப்பேரவை பதிவேடுகளில் பதிவாகி விடக் கூடாது என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படாமல் தமிழகத்தின் வரவு செலவுத்திட்டத்துக்கும், மானியக் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து - குறிப்பாகத் தமிழக மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை மனதில் கொண்டு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாததால், துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு இனிவரும் மாதங்களில் சம்பளம் போட முடியாத அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கும் தமிழகத்தில் ‘வருவாய் மேலும் குறையும்’ என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதால் தமிழக நிதி நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து உருவாகியிருப்பதை இப்போதாவது உணர்ந்து, மானியக் கோரிக்கைகளை விவாதித்து வாக்கெடுப்பு நடத்த மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக