பரமக்குடியில் நிகழ்த்த படுகொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்: இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)
மனித உயிர்கள் மீதான அக்கறை குறித்து தமிழகத்தில் நிலவும் போராட்டங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். ஊடகங்கள், கட்சிகள், தமிழ் இனப்பற்றாளர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் என பல திசைகளிலிருந்தும் மனித உயிர்களுக்கான கருசனை எனக்கூறி போராடி வருகின்றார்கள். ஒரு மனிதனால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான குற்றச்செயலுக்கும் மரண தண்டனை என்பது ஒரு நீதி அல்ல. அதுவும் அநீதியே என்பதை நாம் இன்று நேற்று அல்ல மிக நீண்டகாலமாகவே கூறிவருகின்றோம்.துரோகிகள் என சுட்டபோதும்,கள்வன் எனச்சுட்டபோதும்,விலைமாது எனச்சுட்டபோதும்,இராணுவத்துடன் கதைப்பவன் எனச்சுட்டபோதும், சமூகவிரோதிகள் எனச்சுட்டபோதும் நாம் அனைத்தையும் கண்டித்தே வந்திருக்கின்றோம்.
இவ்வாறான மேற்படி பல மரணதண்டனைகளை தமிழநாட்டு தமிழ்த்தேசிய சிந்தனை ஆதரித்தே வந்தது. இந்த தமிழ்த்தேசிய பெரும்பான்மைதான் இன்று மரணதண்டனைக்கு எதிராக குரல்கொடுத்தும் வருகின்றது.
இந்த தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய சிந்தனையானது பரமக்குடியில் நிகழ்ந்த சாதியக் கொலைக்கு எதிராக , அங்கு மேற்கொள்ளப்பட்ட மரதண்டனைக்கு எதிராக எதையும் அசைக்க மறுக்கின்றதே ஏன்?
மனித உரிமை என்றால் என்ன?
தலித்துக்களின் உசிர் என்ன மசிரா? என நாம் இவர்களை நோக்கி கேட்பதோடு பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட சாதியப்படுகொலைகளை இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக