செவ்வாய், 13 செப்டம்பர், 2011

அழகிரி கைது என தமிழகம் எங்கும் வதந்தி!


இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி தினத்தில் (11.09.2011) பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இன்னும் 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் திமுகவினர் மீது அதிமுக அரசு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நடந்த கலவரத்தால், போலீசாரின் கவனமெல்லாம் கைது நடவடிக்கையை கைவிட்டு, கலவர நடவடிக்கைக்கு சென்றுவிட்டதால், ஆளுங்கட்சி மீது அதிருப்தி அலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் ஆளும்கட்சி தரப்பில் கலவர விஷயத்தை திசை திருப்புவதற்காக, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கைது நடவடிக்கை என செய்தியை பரவவிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது.
இதனால் தென் மாவட்டங்களில் இருக்கும் திமுக பிரபலங்கள் எல்லாம், மு.க.அழகிரி ஆதரவாளர்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு, அண்ணன் கைது செய்தி என்பது உண்மைதானா என்று விசாரித்ததில், அப்படி ஒன்றும் இல்லை. அண்ணன் வீட்டில் தான் இருக்கிறார். இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த செய்தி வதந்தி என நக்கீரனும் உறுதி செய்தது.

கருத்துகள் இல்லை: