ஆங்கில ஆசிரிய பயிற்சித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையே கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஜனாதிபதி ஆலோசகரும் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான செயலணியின் ஒருங்கிணைப்பாளருமான சுனிமல் பெர்ணான்டோ மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேகர, இலங்கை வெளியுறவு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் ஆசிரியர்களும் இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் உத்தியோகத்தர்களும் ஹைதராபாத்திலுள்ள ஆங்கில மற்றும் பிற நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் அங்கத்தவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கையில் ஆங்கிலப் பயிற்சியை விரிவாக்குவதற்கான இந்திய இலங்கை செயற்றிட்டம் எனும் திட்டம் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அமுல் படுத்தப்படும். இச்செயற்றிட்டத்தின் அமுலாக்கலுக்காக ஹைதராபாத் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப சேவையைப் பெற்றுக்கொள்ளும். இத்திட்டங்களின் கீழ் 40 இலங்கை ஆசிரியர்களுக்கு இந்திய அரசாங்கம் பயிற்சியை வழங்கும்.
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் ஒவ்வொன்றிலும் 30 பிரிவுகள் வீதம் ஆங்கில மொழிப் பயிற்சிக்கான இலங்கை - இந்திய நிலையங்களில் மொழி ஆய்வு கூடங்களை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றையும் நிபுணர்களையும் வழங்கும்.
ஆங்கிலத்தை வாழ்க்கைக்கான திறனாக அபிவிருத்தி செய்தல் எனும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கமைய இந்திய அரசாங்கத்தினால் இந்த ஆங்கில மொழிப் பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவி அமுல்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும்ஷிழியிவிரிழிஹி யை இந்திய உதவியுடன் மாகாண மற்றும் பிராந்திய மட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்குச் சம்மதம் அளித்திருந்தனர். இந்தப் புரிந்துணர்வின் விளைவே இன்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றுகையில், ஆங்கிலப் பயிற்சிக்காக இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்படும் தொழில்நுட்ப உதவிக்காக நன்றி கூறினார்.
ஜனாதிபதியவர்களால் 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கைத்திறனுக்காக ஆங்கிலம் திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி வழங்க முன்வந்த முதல் நாடு இந்தியாவேயாகும் எனக் குறிப்பிட்டார்.
ஹைதராபாத் ஆ.வெ.மொ.ப.வில் பயிற்றுவிக்கப்பட்ட 80 பயிற்சியாளர்களால் இரண்டு வருடங்களில் 23,000 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக