இதற்கு முன் 100 சதவீத வரி விலக்கை அனுபவித்து வந்தது தமிழ் சினிமா. அதிமுக அரசு வந்த பிறகு கேளிக்கை வரி 15 சதவீதம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ 100 டிக்கெட் என்றால் அதில் 15 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தப்படும் நிலை உருவானது.
இப்போது இந்த 15 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இது 120 சதவீத உயர்வாகும். இதன் மூலம் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பாக்ஸ் ஆபீஸில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 22 நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் இனி 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும். பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் இது 20 சதவீதமாக இருக்கும்.
அதேநேரம், இந்த கேளிக்கை வரி உயர்வைக் காரணம் காட்டி, டிக்கெட் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, முதல்வரைச் சந்தித்து முறையிட தமிழ் திரையுலகினர் தயாராகிவருகின்றனர்.
ஏற்கெனவே தொழிலாளர் பிரச்சினை, தயாரிப்பாளர்களுக்குள் மோதல் என பல்வேறு சிக்கல்களில் உள்ள சினிமா உலகம், இந்த கேளிக்கை வரி உயர்வால் அதிர்ந்து போயுள்ளது என்றால் மிகையல்ல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக