புதன், 14 செப்டம்பர், 2011

தேர்தல் கூட்டணி தங்கபாலு& இளங்கோவன் அரை மணி நேரம் ஆலோசனை

சென்னை : காங்கிரசில் எதிரும் புதிருமாக இருந்த தங்கபாலுவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நேற்று திடீரென சந்தித்து பேசினர். இதனால், சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு இல்லை. அவருடைய நடவடிக்கைகள் செல்லாது. காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அழித்து விட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக குற்றம்சாட்டி விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணிக்கு திடீரென்று சத்தியமூர்த்தி பவனுக்கு  இளங்கோவன் வந்தார். அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்து, இருவரும் சுமார் 30 நிமிடம் தனிமையில் பேசினர்.

பின்னர், நிருபர்களிடம் இளங்கோவன் கூறுகையில், ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆலோசனை நடத்தி வருகிறார்.
அவரிடம் என்னுடைய கருத்தையும், தொண்டர்களின் கருத்தையும் தெரிவித்தேன். என்னைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துள்ளேன். எங்களது கருத்தை தங்கபாலு மேலிடத்தில் எடுத்துரைப்பார். அதன்பிறகு மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: