வியாழன், 15 செப்டம்பர், 2011

பெரியார்தாசன்:சுப்பிரமணிய சாமிக்கு கொழுப்பு எதனால் வந்தது


திக்குவாய்க்காரன்  எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டான்;
சுப்பிரமணிய சாமிக்கு கொழுப்பு எதனால் வந்தது
: பெரியார்தாசன் பேச்சு



பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று இரவு (15.9.2011) மதிமுக திறந்தவெளி மாநாடு நெல்லை சீமையில் நடைபெற்றது.

10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.  கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,  கொள்கை
பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்,  பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

பேராசிரியர் பெரியார்தாசன் இந்த மாநாட்டில்,


  ’’இந்திய தேசத்தில் இனி தூக்குத்தண்டனை இல்லை என்று செய்யப்போகிற அறுமைத்தலைவா!

யானை இளைத்துவிட்டது என்றால் எலி கூட கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா என்றுகேட்கும்.  சிலரின்
செயல்களால், சில குடும்பத்தின் செயல்களால் திராவிட இயக்கத்தைப்பற்றி  புளு, பூச்சி எல்லாம் ஏளனம் செய்கிறது.

 திராவிட இயக்கம் என்றால் அது மறுமலர்ச்சி திராவிட இயக்கம் மட்டும்தான். 
பெரியாரின்  பேறறிவு வைகோவுக்குத்தான் உண்டு.  அண்ணாவின் அந்த கருத்து ஆற்றல் வைகோவுக்குத்தான் உண்டு.  இவர்தான் திராவிடத்தலைவன்.   இவரால் ஐநா சபையிலும் பேசமுடியும்.   நாடாளுமன்றத்திலும் பேச
கள்ளத்தோணியில் போனவன் என்று உன்னை ஏளனம் செய்தார்கள்.  நல்ல தோணியில் போனவன் எல்லாம்
காட்டிக்கொடுக்க போனான்.   கள்ளத்தோணியில் போன நீதான்(வைகோ) அந்த நாட்டை கட்டிக்கொடுக்க போகிறாய்.

சும்மா வரமாட்டான் பெரியார்தாசன்.  பெரியாரின் பிரதிபலிப்பு நீ( வைகோ).  என்னை கேட்டார்கள்...என்ன
பெறுவதற்கு மதிமுகவிற்கு போகிறீர்கள் என்று கேட்டார்கள்.    தமிழினத்திற்கு மானம் தேடித்தர போகிறேன் என்று சொன்னேன்.  

அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன்.  எனக்கு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது.   உலக இலக்கியம்
எல்லாம் படித்தவன்.  எனக்கு எதுக்கு அரசியல் என்று திமிராக இருந்தேன்.    திக்குவாய்க்காரன் எல்லாம் அரசியல் தலைவனாகிவிட்டதால் எனக்கு கொஞ்சம் உரைத்தது.    அதனால் அரசியலுக்கு வர முடிவு செய்தேன்.
விமானத்தில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு தலைவரிடம் பேச்சு கொடுத்தேன்.   அவர் எதுவும் பேசத்தெரியாததால்
ஊமை போல் உட்கார்ந்திருந்தார்.   இவரெல்லாம் எங்கே மக்களுக்காக பேசப்போகிறார்.

 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்து வாதாட
ராம்ஜெத்மலானி வந்தார்.   நான் அந்த நிகழ்வை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தேன்.   

மூவரின் தூக்கு ரத்து  ஒத்திவைக்கப்பட்டது.   ராம்ஜெத்மலானி வந்தார்.  இவர் வந்தால் வெற்றி என்று
எதிர்பார்த்ததுதான்.  ஆனால் இவரை யார் அழைத்து வந்திருப்பார்.   ரொம்ப பெரிய ஆளாச்சே.   இவரை யார் அழைத்து வந்திருப்பார் என்று எனக்குள் கேள்விகள்.   அப்போது ராம்ஜெத்மலானியிடம் எல்லோரும் நன்றி சொல்ல,  அதற்கு அவர்,  உங்கள் நன்றியை வைகோவுக்கு சொல்லுங்கள்.  அவர்தான் இதற்கு காரணம் என்றார். 

அப்போதே நான் முடிவெடுத்துவிட்டேன்.  இனியும் தாமதிக்கக்கூடாது.   தமிழினத்திற்கு இப்படி
போராடிக்கொண்டிருக்கும் தமிழனிடம் சென்றுவிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.

அவர் மேலும்,   ‘’ஒரு தமிழன்...சுப்பிரமணிய சாமி..... தமிழ் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் ஆங்கிலத்தில் பேசுகிறார்.   சுப்பிரமணிய சாமிக்கு இந்த கொழுப்பு எதனால் வந்தது.   அதனால்....வந்தது.   அந்த கொழுப்பை இதனால்தான் அடக்க முடியும்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: