புதன், 14 செப்டம்பர், 2011

ஜெயலலிதா இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார்

 திருவள்ளூரில் நாளை நடைபெறும் பிரமாண்ட விழாவில், தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு மாடுகள், லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் நாளை முதல் இலவசப் பொருட்களின் விநியோகம் தொடங்குகிறது.

அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை நாளை முதல்வர் ஜெயலலிதா நாளை திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.

இதற்காக திருவள்ளூர் காக்களூர் தனியார் பள்ளி மைதானத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தளம் உட்பட மற்ற ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்து வருகிறது.

அண்ணா பிறந்த நாளான, நாளை (செப்டம்பர் 15), காலை 11 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா பயனாளிகளுக்கு இலவசப் பொருட்களை வழங்குகிறார். விழாவில், மாநில அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்வர்.

இலவச திட்டங்களை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியலை வருவாய்த் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, விழா மேடை மற்றும் அதன் சுற்றுபகுதிகளை, அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

கருத்துகள் இல்லை: