வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகப் போலியான உறுதிமொழிகளை வழங்கிவரும் வேலைவாய்ப்பு முகவர் களிடம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பெற்றோர் தமது வயது குறைந்த இளம் பிள்ளைகளைக் கையளித்து ஏமாறவேண்டாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருதானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைதுசெய்யப்பட்ட வேலை வாய்ப்பு முகவர்களின் உதவியாளர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, திருகோணமலையிலிருந்து வயது குறைந்த இளம் பிள்ளைகள் வேலைவாய்ப்பு முகவர்களால் கொழும்புக்கு அழைத்துவரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலைக்குச் செல்லும் வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் வாங்கித் தருவதாக உறுதிமொழிகளை வழங்கி வயது குறைந்த இளம் பிள்ளைகளை தென்பகுதிக்கு அழைத்து வருவதாகவும், அவ்வாறு அழைத்துவரப்படும் பிள்ளைகள் தெஹிவளை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களின் வயதுகளை அதிகரித்துக் காட்டி போலியான ஆவணங்களை வழங்கி பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். அதன் பின்னர், அப்பிள்ளைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு செயற்பட்டு வந்த வேலைவாய்ப்பு முகவர்களிடமிருந்து 15 போலி கடவுச்சீட்டுக்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர். இந்த நிலையில் திருகோணமலையிலுள்ள தமிழ், முஸ்லிம் பெற்றோர் தமது வயது குறைந்த இளம் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக எந்தவொரு வேலைவாய்ப்பு முகவர்களிடம் கையளிக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக