செனாலி வடுகே
பயங்கரவாத பின்னணி தொடர்பாக பலவித குழப்பங்கள் உள்ளன. உள்ளக இடப்பெயர்ச்சி, மறுவாழ்வு, மீள்ஒருங்கிணைப்பு, மீள்குடியேற்றம்,மனித உரிமை மீறல்கள் போன்ற மற்றும் பல கேள்விக்கணைளை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல தனியார் தொண்டு நிறுவன உபசரிப்பாளர்கள் போன்றவர்கள் ஸ்ரீலங்காமீது பலமாகத் தொடுத்து அதன்மீது தொடர்ந்து குற்றங்களைச் சுமத்தி மகிழ்ச்சியடைவது போலத் தெரிகிறது. ஒரு அரசாங்கமானது மக்களால் தெரிவு செய்யப்பட்டது. எனவே பல முனைகளிலிருந்தும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்மீது வீசியெறியப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி மக்களாகிய நாங்கள் உங்களிடம் சில பதில்களை இப்போது அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத இயக்கமா? அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன எல்.ரீ.ரீ.ஈயினை தடைசெய்துள்ளதோடு மற்றும் ஏனைய 32 நாடுகளும் எல்.ரீ.ரீ.ஈ யினை ஒரு பயங்கரவாத இயக்கம் என்கிற பட்டியலில் உட்படுத்தியிருக்கின்றனவா? அப்படியானால் வெளிநாட்டு மண்ணிலிருந்து கொண்டு தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈ யினரது பயங்கரவாத நிர்வாகத்தை வெளிப்படையாக மேற்கொண்டுவரும் தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட தனியார் இயக்கங்கள் மீது உங்கள் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதை தடுப்பது எது? எல்.ரீ.ரீ.ஈ யினரது மற்றொரு ஆயுதமாக தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த அரசாங்கத்தைப்பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஏனெனில் இதை நடத்துபவர்களின் அவாவானது தொடர்ந்தும் திருட்டுத்தனமான நடவடிக்கைகளான பணமோசடி, போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல்கள் போன்றவற்றை மேற்கொண்டு நிதி சேகரித்து அதன் தலைமையகங்கள் இடையில் பங்கு பிரித்துக் கொள்வதே.
அமெரிக்கா 2003ல் ஈராக்கிய விடுதலை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சதாம் ஹ_சைன் ஒரு பயங்கரவாதியாக இருந்தாரா? அப்படி இல்லாவிட்டால் ஏன் 1.98,200 படை வீரர்கள் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்தனர்? பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் அங்கு இருந்தனவா? அமெரிக்காவும் அதன் நேச அணியினரும் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்வதற்கு சதாம் ஹ_சைன்தான் ஒரு காரணமாக இருக்குமாயின், அவரை 2003 டிசம்பர் 13ல் கைது செய்த பிறகும் அமெரிக்கா ஏன் இன்னமும் ஈராக்கில் தங்கியுள்ளது?
பொது நேர்மைகளுக்கான நிலையத்தின் சமீபத்தைய கற்கையின்படி, புஸ் நிருவாகத்தினரது உயர் அதிகாரிகளால் ஈராக்கைப் பற்றிய 935பொய்கள் 532வௌ;வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவைகள் புஸ்ஸினால் கூறப்பட்ட 259 பொய்களையும், ராஜாங்கச் செயலர் கொலின் பவுலினால் கூறப்பட்ட 254பொய்களையும், பாதுகாப்புச் செயலர் டொனால்ட் றம்ஸ்பெல்ட்டினால் கூறப்பட்ட 109பொய்களையும், பத்திரிகைச் செயலர் அரி பிளெய்ஸ்ச்சர் கூறிய 109பொய்களையும், தேசிய பாதுகாப்புச் செயலர் கொண்டி றைஸ் கூறிய 56 பொய்களையும், மற்றும் உப ஜனாதிபதி செனி கூறிய 48 பொய்களையும் உள்ளடக்குவனவாகும்.
ஈராக்கில் உள்ளக இடப்பெயர்ச்சிக்கு ஆளானவர்களை அமெரிக்கா மீள்குடியேற்றத் தவறிவிட்டது. 2003 டிசம்பரில் சதாம் ஹ_சைனைப் பிடித்தபோதிலும் 2003 – 2005 காலப்பகுதியில் 200,000 ஈராக்கியர்கள் இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகியிருந்தார்கள். 2006 பெப்ரவரியிலிருந்து மேலதிகமாக 1.552,003; ஈராக்கியர்கள் இடப்பெயர்ச்சிக்கு ஆளாகியிருந்தார்கள். சதாம் ஹ_சைனை அழிப்பதுதான் பிரதான இலக்காக இருக்குமானால், அவரைப் பிடித்தபிறகு அதன் விளைவாக உள்ளக இடப்பெயர்ச்சிக்கு ஆளான மக்களை மீள்குடியமர்த்துவதற்கு அமெரிக்காவையும் அதன் நேச அணியினரையும் தாமதிக்க வைத்தது எது? இன்று அங்கு மொத்தமாக சுமார் 4 மில்லியன் ஈராக்கியர்கள் இடப்பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் மற்றும் இடப்பெயர்ச்சிக்கு ஆளாகியிருப்பவர்களின் எண்ணிக்கை 2003லிருந்து நம்பமுடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது (சுமார் 2மில்லியன் பேர் ஈராக்கிற்கு உள்ளே இடம் பெயர்ந்தும், மற்றும் சுமார் 2மில்லியன் பேர் மற்றைய நாடுகளில் அகதிகளாகவும் வாழுகிறார்கள்). ஈராக்கிற்கு உள்ளே இடம் பெயர்ந்து வாழும் இந்த 2மில்லியன் பேர்களும் எந்த வருமானத்திலும் தங்கியிருக்கவில்லை என்பதையும், அதையெல்லாம சமாளித்து வெளியேறுவதற்கான பொறிமுறைகள் எதுவும் கிடையாது என்பதனையும் மற்றும் இந்த இரட்சகர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதனையும் திரு.பிளேக் அவர்களே நீங்கள் அறிவீர்களா?
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் கணக்கெடுப்பின்படி உள்ளக இடப்பெயர்ச்சிக்கு ஆளான மக்களில் 70 விகிதமானவர்கள் பெண்களும், சிறுவர்களும் ஆவார்கள். சமீபத்தைய வழங்குனர் பற்றிய ஒக்ஸ்பாமின் ஆய்வு தெரிவிப்பது 2006ல்மனிதாபிமான உதவிகளுக்கான நிதி வழங்கல், இன்னும் மேலதிக தேவைகள் வேண்டியிருக்கும்போது எச்சரிக்கை தருமளவிற்கு 95 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு குறைந்து போயுள்ளது என்று.
1998ல் ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்ட 44ம் இலக்க சட்டமான உள்ளக இடம்பெயாந்தோருக்கான வழிகாட்டும் கொள்கைகளை அமெரிக்காவும் அதன் நேச அணியினரும் மறந்து விட்டார்களா, எல்லாக் கட்டங்களிலும் இடப்பெயர்ச்சிக்கு ஆளான உள்ளக இடம்பெயாந்தோரின் உரிமைகளான,பாதுகாப்பாக பழைய இடங்களுக்குத் திரும்புதல், அல்லது மீள்குடியமர்த்தல் மற்றும் மேலும் இடப்பெயர்ச்சி ஏற்படாது தடுக்கவேண்டும் என்பனவற்றை இது விளக்குகிறது.
30 வருடங்களாக ஸ்ரீலங்கா வெளிநாட்டு ஆலோசனைகளைப் பின்பற்றி ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு மற்றெந்த நாடும் வழங்கக்கூடியதைக் காட்டிலும், ஏராளமான யுத்த நிறுத்தங்களையும், சமாதான பேரங்களையும், மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வதற்குக் கூட அனுமதிகளை வழங்கியது போன்ற அதிக வாய்ப்புகளை வழங்கியது மட்டுமல்லாது மூன்று வருட காலத்துக்குள் ஒரு பயங்கரவாத அமைப்பையே அழித்தொழித்தது. இரண்டு வருடகாலத்துக்குள் மொத்தமாக 294,000 உள்ளக இடம் பெயர்ந்தவர்களில் 3000 பேரைத் தவிர மற்றவர்களை நடைமுறைப்படி மீள்குடியேற்றவும் ஸ்ரீலங்காவால் இயலக்கூடியதாகவிருந்தது. இந்த 3000பேரும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகளை விரும்புவதால், திரும்பிச் சென்று ஒரு புதுவாழ்வை மீளாரம்பிப்பதை விரும்பவில்லை போலத் தெரிகிறது.
எப்படியாயினும் அமெரிக்காவும் அதன் நேச அணியினரும் ஈராக்கின் சர்வாதிகாரியை அப்புறப்படுத்தி, அங்கு வழமை நிலையை திரும்பச் செய்வதுடன், ஈராக்கில் ஜனநாயகத்தை உருவாக்குவதாக ஈராக் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றாதது, வருத்தம் தருவதாகவுள்ளது. ஆனால் உண்மையில் அமெரிக்காவும் அதன் நேச அணியினரும் ஈராக்கிற்கு எதைப் பெற்றுக் கொடுத்தனர்?
உணவு உதவிகளில் தங்கியிருக்கும் 4மில்லியன் ஈராக்கியர்களில் தற்சமயம் 60 விகிதமானவர்களே அரசாங்கத்தால் நடத்தப்படும் பொது வழங்கல் முறைகளின் கீழ் பங்கீட்டு உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். 2004ல் இது 96விகிதமாக இருந்தது. 43விகிதமான ஈராக்கியர்கள் மோசமான வறுமை நிலையிலுள்ளார்கள். அதன் குடிசனத்தொகையில் பாதியளவானவர்கள் வேலையற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பணத்தை தேடுவதற்கு வேறு மார்க்கம் எதுவுமில்லாதபடியால் கொசவாவோவில் நடப்பதைப்போல விபசாரத்தை மேற்கொள்வதே சிறந்ததாக நம்பப்படுகிறது. பெண்கடத்தல் ஒரு இலாபகரமான வணிகமாக மாறியுள்ளது. அநேக கன்னியரான பதின்ம வயதுப் பெண்கள் சுமார் 5000 டொலர்களுக்கு விற்கப்பட்டு, வட ஈராக்,சிரியா, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற இடங்களுக்கு கடத்தப்படுகிறார்கள். சிறுவர் விபசாரத்தில் பங்கெடுத்துள்ளவர்களின் தொகை கிட்டத்தட்ட 50,000 வரை இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளதுடன், அவர்கள் மிகவும் இளம் பிராயத்தினரான 13வயதுள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.
திரு.பிளேக் அவர்களே! நீங்கள் அறிவீர்களா 2003ல் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு முன்னர் 19 விகிதமாக இருந்த சிறுவர் போசாக்கின்மை இப்போது 28 விகிதமாக அதிகரித்துள்ளது என்பதை. 2006ம் ஆண்டில் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 11 விகிதமானவைகள் நிறை குறைவாகப் பிறந்தன. 2003ம் ஆண்டில் இது 4விகிதமாகவே இருந்தது. நாடு முழவதிலுமுள்ள 180வைத்தியசாலைகளில் 90விகிதமானவை அடிப்படை மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை வசதிகள் போன்ற முக்கிய வளங்கள் அற்றவையாகவுள்ளன.
போதுமானளவு நீர் வசதியைப்பெற்றுக் கொள்ள முடியாத ஈராக்கியர்களின் எண்ணிக்கை 2003ல் 50 விகிதமாகவிருந்தது. அது இப்போது 70 விகிதமாக உயர்ந்துள்ளது. மூளைசாலிகளின் வெளியேற்றம் அங்கு பெரும் அளவில் இடம்பெறுகிறது – 40 விகிதமான மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மற்றும் பல தொழிற்திறன் வாய்ந்தவர்கள் போன்ற பலரும் ஈராக்கை விட்டுப் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஈராக் அவர்களின் சர்வாதிகாரி சதாம் இல்லாமல் சுதந்திரமாக இருக்குமானால் ஏன் அவர்கள் வெளியேற வேண்டும்? ஒரு ஆய்விலிருந்து கண்டறிந்திருப்பது 92விகிதமான பிள்ளைகளுக்கு கற்றல் இடையூறுகள் ஏற்ப்பட்டிருப்பதாக, அதற்கான பிரதான காரணம் தற்போதைய சூழலைப் பற்றி உண்டாகியிருக்கும் அச்ச உணர்வே. ஐக்கிய இராச்சியத்தின் சிறுவர்களை பாதுகாப்போம் என்கிற நிறுவனத்தின் கணக்குப்படி சுமார் 800,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்சமயம் பாடசாலைகளுக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள், 2004ல் இது 600,000 ஆகவிருந்தது.
இன்னமும் வெளிநாட்டு இராணுவமும் ஏராளமான தொண்டு நிறுவனங்களும் ஈராக்கில் நிலை கொண்டுள்ளன. அதைப்பற்றிக் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி, அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்? 2003க்கு முன்பு ஒரு கையளவு எண்ணிக்கையான தொண்டு நிறுவனங்களே அங்கு பணியாற்றி வந்தன. இன்று அங்கு 11,000 தொண்டு நிறுவனங்கள் உள்ளன (சமூக அமைப்பு அமைச்சின் மதிப்பீட்டின்படி இவைகளில் சுமார் 3000 வரையான நிறுவனங்களே, பதிவு செய்யப்பட்டவைகளும் சட்டபூர்வமானவையும் ஆகும்). இதேபோன்ற காட்சியமைப்புத்தான் ஸ்ரீலங்காவிலும் காணப்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம்தான் திட்டமிட்டு அதன்மீது படையெடுக்கத் தூண்டியது என நம்பப்படுகிறது. முன்னாள் அமெரிக்க உதவி ஜனாதிபதி டிக் செனி தலைமையிலான ஹலிபட்டன் நிறுவனத்துக்கு (அதன் துணை நிறுவனமான கெலோக், பிறவுண் மற்றும் றூட் என்கிற கேபி ஆர் நிறுவனத்துக்கு) 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ மற்றும் இதர எண்ணெய் வழங்கல் ஒப்பங்தங்கள் வழங்கப்பட்டிருந்தன.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக