ஈ.பி.டி.பி ஊடக அறிக்கை
நாம் தமிழ் பேசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியே தவிர வன்முறை நோய் கொண்டு அலையும் துணை இராணுவக்குழு அல்ல. இந்த உண்மையை தனது வழமையான கபட நோக்கத்தோடு எம்மீது அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருக்கும் ஊடங்களுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், அண்மையில் இலங்கைக்கான உத்தியோகப+ர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் வழமை போல் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு எம்மீதான ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாம் துணை இராணுவக்குழு என்றும், ஆயுதங்களோடு நடமாடுவதாகவும் தெரிவித்திருந்த அவர் நாம் வைத்திருப்பதாக அவர் கூறும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது தவிர யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமக்கும் இடையில் முரண்பாடுகளை திட்டமிட்டு தோற்றுவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களை தான் சந்திக்கவிருந்ததாக பொய்யுரைத்து, தமது சந்திப்பை நாமே தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இவைகள் உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதும், எம்மீது அவதூறு பரப்புவதுமான ஒர் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். (மேலும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக