வெள்ளி, 16 செப்டம்பர், 2011

டிராபிக் ராமசாமி மனு ஜெயலலிதாவை முதல்வர் பதவிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்

Traffic Ramaswamy

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு உள்ளதால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகரான டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், உயர் பதவி வகிப்பவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சி.வி. தாமஸைப் பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப அதிகாரம் உள்ளது என்று தாமஸ் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது போன்ற குற்றச்சாட்டுகளில் தனி நபரின் குணத்துக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று 2009ல் நீதிபதி கண்ணதாசன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது கடந்த 14 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரைப் பதவி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் உயர் பதவியில் வகிக்கக் கூடாது என்பது தொடர்பான விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: