- ஜெகான் பெரேரா
இருபகுதியினரையும் ஒன்றாக இணைப்பதற்கான எந்த நகர்வும் முன்னெடுக்கப்படவில்லை. தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பெரும்பான்மை இனத்தவரை தன்னுடன் இணைய வைக்கும் முயற்சியாகத் தேர்தல்களில் வெற்றி பெறுவது மூலம் அரசாங்கம் தனது அரசியல் பலத்தை வெளிக்காட்டியுள்ளது. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அப்படிச் செய்வதில் அது தோல்வியே கண்டுள்ளது, அங்கெல்லாம் தமிழ்தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெற்றுள்ளது.
மிகவும் முக்கியமானதும் மற்றும் தனிப்பட்ட பங்களிப்புமாக எதிர்கால வடக்கு மாகாணசபையானது ஸ்ரீலங்காவிலுள்ள அதிகாரப்பகிர்வின் முழுத்திட்டத்திலும் செயற்பட முடியும். தற்சமயம் நாட்டில் உள்ள சகல மாகாணசபைகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இதில் கிழக்கு மாகாணசபையும் உட்படுகிறது. அதற்கு ரி.எம்.வி.பி தலைமை தாங்கினாலும் அது அரசாங்கத்தின் கூட்டணியிலுள்ள ஒரு கட்சியாகும். தற்பொழுது மாகாணசபைகளில் உள்ள தலைவர்களிடமிருந்து வெகு அரிதாகவேனும் மறுசீரமைப்புக்கான ஒரு செயலூக்கம் வருவதைக் காணமுடியாது, ஏனெனில் அவர்களில் ஒருவர்கூட அரசாங்கத்துக்கு அதிருப்பதி ஏற்படுத்துவதை விரும்பவில்லை. எவ்வாறாயினும் வடக்கு மாகாணசபை நிறுவப்படும் நிகழ்வு ஏற்பட்டால், அநேகமாக அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின்கீழ்தான் அமையக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அனைத்து மாகாணங்களுக்குமான அதிகாரப் பகிர்வு முறையை மேம்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும். எதிர்கால வடக்கு மாகாணசபையில் தலைமைத்துவம் பெறக்கூடிய ஒன்றாகவிருப்பது, அதிகாரப் பகிர்வின் ஒரு முக்கிய பகுதியாகவுள்ள அரசிறைவரி சம்பந்தமான அதிகாரப் பரவலாக்கமாகும். (மேலும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக