வாஷிங்டன் : நமது சூரியனை விட சிறிய வடிவிலான அதிக வெப்பத்துடன் 2 புதிய சூரியன்களையும் அவற்றை சுற்றி வரும் புதிய கிரகத்தையும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா. அதன் சார்பில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கெப்ளர் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அது எடுத்து அனுப்பிய சமீபத்திய படங்களை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
ஆம். 2 சூரியன்கள், ஒரு புதிய கிரகம் இருப்பது படங்களில் தெரிந்தது. பூமியில் இருந்து 200 ஆண்டு காலத்துக்கு சமமான தூரத்தில் உள்ள அந்த கிரகத்துக்கு கெப்ளர் 16பி என்று பெயரிட்டுள்ளனர்.
முற்றிலும் உறைந்த நிலையில் பாறைகள், வாயுவுகள் மட்டும் நிறைந்த, உயிரினம் வாழ முடியாத அந்த கிரகம், அருகில் உள்ள வெப்பமான 2 சூரியன்களை சுற்றி வருவதாக தெரிவித்தனர். கெப்ளர் கிரகம் சனி கிரகத்தின் அளவில் உள்ளது.ஆம். 2 சூரியன்கள், ஒரு புதிய கிரகம் இருப்பது படங்களில் தெரிந்தது. பூமியில் இருந்து 200 ஆண்டு காலத்துக்கு சமமான தூரத்தில் உள்ள அந்த கிரகத்துக்கு கெப்ளர் 16பி என்று பெயரிட்டுள்ளனர்.
2 சூரியன்களை பொருத்தவரை நமது சூரியனை விட அளவில் சிறியவை. முதலாவது நமது சூரியனைவிட 3ல் 2 பங்கும், 2வது சூரியன் 5ல் ஒரு பங்கு அளவும் இருக்கின்றன. இவை தன்னைத் தானே சுற்றி வருகின்றன. இவற்றை கெப்ளர் கிரகம் சுற்றி வரும்போது விழும் நிழலால் அடிக்கடி கிரகணம் ஏற்பட்டு வருவதும் கெப்ளர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்களில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆலன் பாஸ் கூறுகையில், ‘‘20 நாட்களுக்கு ஒருமுறை இந்த சூரிய நட்சத்திரங்கள் அருகாமையில் வருகின்றன. அப்போது கெப்ளர் 16பி கிரகத்தில் விழும் நிழலால் கிரகணம் ஏற்படுகிறது. எனினும், இவற்றின் இயக்கத்தின் வேகம் துல்லியமாக கணக்கிட முடியவில்லை’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக