சனி, 17 செப்டம்பர், 2011

அனுராதபுரத்தில் சாதனை புரிந்த தமிழ்..விசுவமடுவிலும் தொடர்ந்துள்ளது!



தெற்கில் களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவி சசிபிரபா பொன்சேகா, களுத்துறை மிரிஸ்வத்தை மகா வித்தியாலய மாணவி நெத்மி ரணவீர, கெக்கிராவை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஸக்கீ அகமட் ஆகியோரே 195 அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அதில் ஸகி அஹமட் தமிழ் மொழிமூலம் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. மற்றைய இருவரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களாகும். விசுவமடு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயம், பிபிலை மெதகம மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் 194 புள்ளிகளைப் பெற்று இரண்டா மிடத்தையும் ஹக்குறுவெல உதயால மகா வித்தியாலயம், பொல்காவலை அல் அக்ஷா முஸ்லிம் வித்தியாலயம், மஹியங்கனை தெஹிகொல்லை வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் 193 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் பத்துப் பாடசாலைகள் 192 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்திலுள்ளன. அவற்றில் நுகேகொட சென். ஜோசப் மகளிர் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு ஹரிச்சந்ர மகா வித்தியாலயம், இரத்தினபுரி தர்மபால மகாவித்தியாலயம், பலாங்கொடை சென். எக்னஸ் மகளிர் மகா வித்தியாலயம், நிக்கவரெட்டிய குணபால மலலசேகர வித்தியாலயம், அநுராதபுரம் டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயம், மாத்தளை நுககொல்ல மகா வித்தியாலயம், தனமல்வில கித்துல் கோட்டை கனிஷ்ட வித்தியாலயம், நிந்தவூர் அல் அஷ்ரக் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலயம் ஆகியன உள்ளடங்குகின்றனனெவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி ரமேஷ் நிநுர்ஷிகா 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களான லோ. டிலோஜன் 191 புள்ளிகளையும், வ. பவதாரகன் 190 புள்ளிகளையும், ர. மாதங்கி 188 புள்ளிகளையும், சி. தனலக்ஷன் 181 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: