வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அதிவேகப் பாதையின் கிலோமீற்றர் ஒன்றின் நிர்மாணத்துக்கு ஆறுகோடி செலவு


இலங்கையின் தென்பகுதி அதிவேகப் பாதைக்கான கிலோமீற்றர் ஒன்றின் நிர்மாணத்துக்கு ஆறுகோடி செலவிடப்பட்டுள்ளது.கடந்த 1995ம் ஆண்டு தொடக்கம் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த அதிவேகப் பாதையானது கொட்டாவையிலிருந்து மாத்தறை வரை 126 கிலோ மீற்றர்கள் தூரம் கொண்டது.

தற்போதைக்கு கொட்டாவை தொடக்கம் காலி வரையான 100 கிலோ மீற்றர்கள் வரையான பாதை நிர்மாணப் பணி நிறைவுற்றுள்ளது.

அதன்போது அதிவேகப் பாதையின் ஒரு கிலோ மீற்றர் நிர்மாணத்துக்கென ஆறு கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

பாதையின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விளக்குக் கம்பங்கள், பாதுகாப்புத் தூண்கள், போன்ற ஏனைய நிர்மாணப் பணிகளையும் சேர்த்துக் கவனத்தில் எடுத்தால் கிலோ மீற்றரொன்றுக்கு சுமார் பத்துக்கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இவ்வாறான கொள்ளையடிப்புகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், லஞ்சம் மற்றும் ஊழலை நாட்டில் தலைவிரித்தாட வழிசெய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது கண்டனம் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை: