வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தமிழ்மொழி மூல மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

2011 ம் ஆண்டின், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாடளாவிய ரீதியில் 195 என்ற உயர் புள்ளிகளுடன் முதல் இடம்பெற்ற மூன்று பேரில் தமிழ் மொழி மூல மாணவர் ஒருவரும் இரண்டு சிங்கள மாணவர்களும் உள்ளடங்குகிறார்.அநுராதபுரத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள கெக்கிராவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சஹீ அஹமட் என்ற தமிழ்மொழி மூல மாணவரே இந்த சாதனைக்கு உரியவராவார்.

அதேவேளை வவுனியா விஸ்வமடு மேற்கு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயத்தின் பரமேஸ்வரன் சேதுராகவனும் மற்றும் ஒரு சிங்கள மாணவரும் 194 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா என்ற மாணவி 192 புள்ளிகளை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி 183 புள்ளிகளைப் பெற்ற இ.கி.மி.பெண்கள் பாடசாலை மாணவி ரஜிநாதன் துர்க்கா காரைதீவுக் கோட்டத்தில் முன்னணியில் உள்ளார்.

மாவட்ட நிலைப் புள்ளி 17.

ஒலுவில் துறைமுக அலுவலர் ரஜிநாதன் ஆசிரியை சுகந்தினி தம்பதிகளின் மூத்த புதல்வியாவார்.

2011 ம் ஆண்டின், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாடளாவிய ரீதியில் 195 என்ற உயர் புள்ளிகளுடன் முதல் இடம்பெற்ற மூன்று பேரில் தமிழ் மொழி மூல மாணவர் ஒருவரும் இரண்டு சிங்கள மாணவர்களும் உள்ளடங்குகிறார்.அநுராதபுரத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள கெக்கிராவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சஹீ அஹமட் என்ற தமிழ்மொழி மூல மாணவரே இந்த சாதனைக்கு உரியவராவார்.

அதேவேளை வவுனியா விஸ்வமடு மேற்கு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயத்தின் பரமேஸ்வரன் சேதுராகவனும் மற்றும் ஒரு சிங்கள மாணவரும் 194 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா என்ற மாணவி 192 புள்ளிகளை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி 183 புள்ளிகளைப் பெற்ற இ.கி.மி.பெண்கள் பாடசாலை மாணவி ரஜிநாதன் துர்க்கா காரைதீவுக் கோட்டத்தில் முன்னணியில் உள்ளார்.

ஐந்தாம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா என்ற மாணவி யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.இது தொடர்பில் நிதுஷிகா தெரிவிக்கையில், தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோலாக அமைந்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: