திருச்சி : முன்னாள் அமைச்சர் நேரு மீதும், அவர் தம்பி ராமஜெயம் உள்ளிட்ட குடும்பத்தார் மீதும் தொடர்ந்து புகார்கள் எழாவண்ணம் இருக்க, பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு மீதும், அவரது தம்பி ராமஜெயம் உள்ளிட்ட பலர் நில அபகரிப்பு புகாரில் சிக்கி, தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நேருவை விட அவருடைய தம்பி ராமஜெயம் மீது தான், அதிகளவில் நில அபகரிப்பு புகார்கள் வரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.நில அபகரிப்பு புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராமஜெயம் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, மேலும் புகார்கள் வராமல் இருக்க, அவரது தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஐந்தாண்டு, தி.மு.க., ஆட்சியில் ராமஜெயம் தரப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுவோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் நிலத்தையோ, வீட்டையோ இழந்தவர்களாக உள்ளனர்."போலீசுக்கு போகாமல் இருந்தால், இழப்புக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும்' என, ராமஜெயம் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குறுதி அளிக்கப்படுகிறதாம். இந்த பணியை அவருக்கு மிகவும் நம்பகமான வழக்கறிஞர் ஒருவர் தான் செய்து வருகிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக