பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையின் ஊடாக தமிழகத்திற்குள் பிரவேசிப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கை, பங்களாதேஸ், நேபாளம் போன்ற நாடுகளின் ஊடாக இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஊடுறுவ முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கான வழியாக இலங்கையை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லாத நாடே கிடையாது, அமெரிக்காவிலும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.
இந்த ஆண்டில் இதுவரையில் 22 நாடுகளில் 279 தீவிரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகின் முக்கியமான தீவிரவாத அமைப்புக்களில் பெரும்பான்மையானவை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
அவற்றில் அநேகமானவை இந்தியாவை இலக்கு வைத்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக