வியாழன், 15 செப்டம்பர், 2011

கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு நடிகர்கள் கால்ஷீட் தர வேண்டாம்! - கேயார்


Keyar

சென்னை: பெரிய நடிகர் நடிகைகள் கார்ப்பொரேச் நிறுவனங்களுக்கு உடனே கால்ஷீட் தந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. தயவு செய்து இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தர வேண்டாம். அப்படி தருபவர்கள் நன்றி கெட்டவர்கள், என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறியதாவது:

இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். வெகு சிலர்தான் பல ஆண்டுகள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு சினிமாதான் எல்லாமே. வேறு தொழில் தெரியாது.

ஆனால் இன்றைக்கு பல்வேறு துறைகளில் உள்ள கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா பிரிவைத் தொடங்கி படமெடுக்க வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பற்றியோ, கலை பற்றிய ஒன்றும் தெரியாது, அதுகுறித்த அக்கறையும் அவர்களுக்கில்லை.

இவர்களால்தான் சினிமா இன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இவர்களும் காரணம்.

கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமாவை விநியோகம் செய்யட்டும். அத்தோடு அவர்கள் வேலையை நிறுத்திக் கொள்ளட்டும். தனி நபர்கள் சினிமா தயாரிக்கட்டும். அதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.

தயவு செய்து கார்ப்பொரேட் நிறுவனங்கள் கேட்டதும் கால்ஷீட்டை தாராளமாகத் தரும் போக்கை நடிகர் நடிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தராதீர்கள். அப்படி மீறித் தந்தால், அதை விட நன்றிகெட்டதனம் எதுவும் இல்லை," என்றார் கேயார்.

கருத்துகள் இல்லை: