புதன், 11 ஆகஸ்ட், 2010

டாடா நிறுவம் பார்ஸி குழுமம் அல்ல!: ரத்தன் TATA

மும்பை: எனக்குப் பின் டாடா குழுமத் தலைவராக வருபவர் பார்ஸி இனத்துக்கு எதிரானவராகவோ ஆதரவானவராகவோ இருக்கக் கூடாது, என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக தனக்குப் பின் வரும் தலைவர் [^] குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.

டாடா கெமிக்கல்ஸின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ரத்தன் டாடாவிடம், "டாடா குழுமத்தின் புதிய தலைவர் பார்ஸிக்காரரா, இந்தியரா அல்லது வெளிநாட்டவரா" என்று பங்குதாரர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த டாடா, "டாடா குழுமம் என்பது ஒரு இந்திய நிறுவனம். பார்ஸி குழுமம் அல்ல. அதேநேரம் ஜாம்ஷெட்ஜி டாடா ஸ்தாபித்த போது இருந்த டாடா நிறுவனமல்ல இது. இன்று 70 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் மாபெரும் குழுமம். இதில் 70 சதவீதம் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது. எனவே வெறுமனே இந்தியாவை மையப்படுத்திய நிறுவனமாகவும் டாடா குழுமம் இன்று இல்லை" என்றார்.

வரும் டிசம்பர் 28, 2012-ல் ரத்தன் டாடாவுக்கு 75 வயதாகிறது. அவர் ஓய்வு பெற வயது வரம்பு ஏதுமில்லை என்றாலும், அவராகவே விரும்பி இந்த ஓய்வை அறிவித்துள்ளார். தனக்குப் பின் வரும் தலைவரைத் தேர்வு செய்ய 5 நபர் கமிட்டி ஒன்றையும் அமைத்துள்ளார்.

ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப்போகிறீர்கள் என ரத்தன் டாடாவிடம் கேட்டபேது, "உங்களைப் போல நான் இதுபோன்ற ஆண்டு பொதுக் கூட்டங்களில் பங்கேற்று புதிய தலைவரைக் கேள்வி கேட்கப் போகிறேன்" என்றார்.

டாடா குழுமத் தலைவர் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா விலகினாலும், அக்குழுமத்தின் அனைத்து அறக்கட்டளைகள், சொத்து சார் அமைப்புகளின் தலைவராக அவர் நீடிப்பார்.
பதிவு செய்தவர்: தி கமெண்டர்
பதிவு செய்தது: 10 Aug 2010 11:19 pm
பல்லாயிரம் கோடி புழங்கும் தொழில் ஸ்தாபன அதிபர் பதவியை சாதாரணமாய் தூக்கியெறியும் இவரை நம் அரசியல் வாதிகள் பின்பற்றினால் நாடு முன்னேறும் .

பதிவு செய்தவர்: Vjay
பதிவு செய்தது: 10 Aug 2010 10:41 pm
ரத்தன் டாட்டா "தி கிரேட் பெர்சன்" இந்திய வின் தலை சிறந்த வியாபாரி. மற்றவருக்கு உதவும் மனம் கொண்ட உயர்த்த மனிதர்.

கருத்துகள் இல்லை: