ஆந்திர மாநிலம் ஆதிலா பாத்மாவட்டம் கேய்லாபூர் கிராமத்தில் ஆதிவாசி ஆசிரம அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பவர் ராமு. இவர் மிகவும் கண்டிப்பானவர்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினமும் 5 மணி முதல் 6 மணி வரை உடற் பயிற்சி செய்வது வழக்கம்.
நேற்று உடற்பயிற்சிக்கு 40 மாணவிகள் 5 நிமிடம் தாமத மாக வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமு அவர்களை 600 தோப்பு கரணம் போடுமாறு கூறினார்.
நீண்ட நேரம் தோப்பு கரணம் போட்டதால் 10 மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர். 30 பேர் மிகவும் சோர்வடைந்தனர். அவர் களால் எழுந்து நடக்க முடிய வில்லை.
இதையடுத்து 40 பேரையும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீணா, சுவாதி, ரத்னமாலா, அனிதா உள்பட 10 மாணவிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 30 பேருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இதையறிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆஸ்பத்திரி சென்று மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினர். மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் ராமுவை சஸ்பெண்டு செய்தார். தலைமை ஆசிரியருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார்.
சில நாட்களுக்கு முன்பு வாரங்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை ஒருவர் மாணவ-மாணவிகளுக்கு விறகு கட்டையால் சூடு போட்டார். இதேபோல் ஆசிரியர் ராமுவும் மாணவி களை நீண்டநேரம் தோப்பு கரணம் போட வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு மாணவ- மாணவி களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதலில் ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்கவேண்டும் |
இந்த **** தூக்குல போடணும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக