சனி, 14 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியை அல்லது மாங்குளத்தைநிர்வாக நகராக மாற்றும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து விடும்

வடமாகாண பணிகளை முன்னெடுப்பதற்காக கிளிநொச்சியை அல்லது மாங்குளத்தை முக்கிய நகர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னர் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
வடமாகாணத்திற்கான நிர்வாக அலுவலகங்கள் யாவும் தற்போது திருகோணமலையிலேயே இயங்கி வருகின்றன.
இந்தநிலையில் அந்த கட்டமைப்பை கிளிநொச்சிக்கு மாற்ற வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ மேற்கொண்ட நடவடிக்கையை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் விருப்பத்தின் பேரிலேயே இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தாம் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி திரும்பப் பெற்றுள்ளமைக்கு பாதுகாப்பு பிரச்சினையா? காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை விட அழிந்துபோயுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து விடும் இது தமக்கு எதிரான சக்திகளின் சர்வதேச பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: