இலங்கை சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கனடாவை நோக்கிச் செல்ல ஆயுத்தமாவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். |
இந்தக் கப்பல்களில் 500 தமிழ் சட்டவிரோதக் குடியேறிகள் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத குடியேறிகளில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச் சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்ட கப்பலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளிக்கும் மரியாதையின் அடிப்படையில் ஏனைய இரண்டு கப்பல்களும் பயணத்தைத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். |
புதன், 11 ஆகஸ்ட், 2010
அடுத்த இரு கப்பல்கள் கனடாவை நோக்கி ஆயத்தம் : ரொஹான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக