புதன், 11 ஆகஸ்ட், 2010

வம்சம் படத்தில் ஒரு பசு மாட்டுக்கு அசின் என பெயர்

சுனேனா கதாநாயகியாக நடிக்கும் வம்சம் படத்தில் ஒரு பசு மாட்டுக்கு அசின் என பெயர் வைத்துள்ளனர். இது அசினை இழிவுபடுத்துவதுபோல் ஆகாதா என்று சுனேனாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:
படத்தில் அழகான பசு மாடு முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. அதற்கு அசின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனக்கும் கதாநாயகனுக்கும் காதல் தூதாக அந்த மாடு பயன்படுத்தப்படுகிறது. கதாநாயகன்தான் அந்த பசு மாட்டை எனக்கு விற்பார். அதற்கு நான் அசின் என பெயர் வைப்பேன். அசின் அழகான சிறந்த நடிகை, எல்லோருக்கும் அந்த பெயரை பிடிக்கும். எனவேதான் செல்லமாக வளர்க்கும் பசு மாட்டுக்கு அசின் என பெயர் வைத்து அழைத்தோம்.
நான் மட்டு மன்றி படப்பிடிப்பு குழுவினர் எல்லோரும் அசின் (பசு) மேல் பிரியம் காட்டினார்கள். எனக்கு மிருகங்களை பிடிக்கும். அசின் மீதும் மிகுந்த அன்பு காட்டினேன். நடிகை அசினை இழிவுப் படுத்தவில்லை என்று சுனேனா கூறினார்.

கருத்துகள் இல்லை: