சனி, 14 ஆகஸ்ட், 2010

வெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர்

  www.soodram.com. (பகுதி 5 சாகரன்)

இறுதிக்கட்டப் போரில் நடேசன், புலித் தேவன் போன்றவர்கள் சயனைற் அருந்தி தற்கொலை செய்யவில்லை மாறாக வெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர். எதிரியின் கையில் உயிருடன் பிடிபடுவதில்லை என்பது என்னவாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக புலித் தலைவன் பிரபாகரன் சயனைற் அருந்தவில்லை. மாறாக இலங்கை அரசிடம் சரணடைந்தான் எப்பதே அவர்களின் இறுக்கமான சயனைற் தற்கொலைக் கட்டுப்பாடு. சயனைற் தற்கொலைக் கட்டுப்பாட்டில் புலிகள் உறுதியாக இருந்திருந்தால் இன்று இராணுவத்தின் விசேட முகாங்களில் 10,000 மேற்பட்ட புலிகள் அடைந்திருக்கமாட்டார்கள். மாறாக மயானங்கள்தான் நிறைந்திருக்கும்.
மீண்டும் சொல்கின்றோம் எமக்கு சயனைற் தற்கொலையில் உடன்பாடு இல்லை. நாம் வாழ்வதற்காக போராடும் வாழ்வை நேசிக்கும் மக்கள் போராளிகள். இதில் நாம் சில வேளைகளில் மரணத்தை தழுவலாம். ஆனால் சாவை வலிந்து ஏற்கும் மனநோயாளிகள் அல்ல. இன்று உலகின் பலபாகங்களிலும் மட்டக்களப்பு சிறை உடைப்பில் இருந்து மீண்ட பல புலி உறுப்பினர்கள் அன்றொருநாள் சயனைற்றை உட்கொண்டிருந்தால் இன்று மனித உரிமை மீறல் போர்க் குற்றங்கள் என்று தொடர்ந்தும் தமது பிழைப்புக்களை நடாத்திக் கொண்டு இருக்க முடியாது.

புலிகளின் தோல்வியை எவ்வாறு தவிர்த்திருக்கலாம். இது சற்றுக்கடினமான விடயம்தான் தமிழர் தரப்பில் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்ற சிந்தனை என்று இல்லாமல் போனதோ அன்றே புலிகளின் தோல்விக்கு அத்திவாரம் போட்டாகிவிட்டது.

புலிகளை ஆதரிப்பதல் மாத்திரம் அல்ல புலிகளை எதிர்பதிலும் ஒரு வகை ஏகபோகமே நிலவி வந்தது. அதுதான் புலிகளின் விழ்ச்சிக்கு பின் இன்று வரை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் பலம் பெறமுடியவில்லை. இந்நிலை நீடித்தால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஏகபோக சிந்தனையும் செயற்பாடும் மீண்டும் வலுப் பெறும்....... இதன் போக்கில் மீண்டும் ஒரு முள்ளிவாய்கால் நிகழ்வு இனிமேலும் நடைபெற மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

புலிகள் ஒரு மிகவும் கட்டுப்பாடான இயக்கம் என்பது வெளித் தோற்றத்திற்கு காட்டப்பட்ட ஒரு மாயை. சயனைற் தற்கொலையில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் புலித்தலைவர் உட்பட சகல உறுப்பினர்களும் மாலைபோல் கழுத்தில் அணிந்திருந்வொன்று சயனைற் குப்பிகள். இது சீலனில் ஆரம்பித்து அருணா வரைக்கும், இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் குமரப்பா புலேந்திரன் போன்ற முக்கிய புலி உறுப்பினர்கள் வரைக்கும் மக்களுக்க 'படம்' காட்டும் பொருளாக மட்டும் பாவிக்கப்பட்டது. இதனாலேயே இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டார்கள். யாரும் சயனைற்றை பயன்படுத்தவில்லை. பலாலி இலங்கை இராணுவ முகாமில் காவலில் வைத்திருந்த குமரப்பா, புலேந்திரன் கோஷ்டிக்கு பின்பு தலைவர் பாலசிங்கம் ஊடாக சயனைற்றை கொடுத்தனுப்பி கொன்றார் என்பதே உண்மைநிலை. இதனைக் காரணம் காட்டியே புலிகள் இந்திய இராணுவத்தின் மீதம் வலிந்த தமது தாக்குதலை ஆரம்பித்தனர் என்பது இதனுடன் கூடிய நிகழ்வு.

கருத்துகள் இல்லை: