ஜூலை ஏப்ரல் விடுமறையில் இலங்கைக்கு படையெடுத்து விட்ட புலம்பெயர் வீரத்தமிழர்கள்
கடந்த வருடம் மே மாதத்திற்கு முன்பு பிரபாகரன் எமது தலைவர், நமது நமது நாடு தமிழீழம் என ஐரொப்பா, கனடா , அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நகரங்களில் புலம்பெயர்தமிழர்கள் செய்த அட்டகாசங்களை உலகமே அறியும். ரயில் பாதையில் குதிப்பது, தூதரங்களை தாக்குவது, நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடாத்துவது, உண்ணா விரதம் இருந்தது என தமிழர்களின் ஆர்பார்ட்டங்கள் எல்லாம் தேசியத்தலைவரை யுத்தத்தில் இருந்து காப்பாற்ற நடாத்திய போராட்டங்கள்தான்.
வன்னியில் விவசாயம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த மக்களையெல்லாம் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று 30000ஆயிரம் பேர்வரை சாகக் காரணமாக இருந்தவர்கள் புலிகள்தான் என்பதை சர்வதேசம் நன்கு அறியும். மக்களை விடுவிக்கச்சொல்லி புலிகளை நோக்கி விடுக்கப்பட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகளின் குரல்களை மதிக்காமல் இந்த புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பகுதி புலிகளுக்காக கத்தி குளறியது. ஆனால் புலிகளைக் காப்பாற்ற ஆண்டவனும் இறுதியில் வரவில்லை.
யுத்தம் முடிந்து ஒரு வருடங்களுக்கு மேலாகி விட்டது. புலம் பெயர் தமிழ்ர்கள் செத்த மாட்டிலிருந்து உண்ணி களருவதைப்போல் புலி ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து களன்று வருகிறார்கள்.
பாவம் இவர்கள் புலிகளை நம்பி கடந்தகாலங்களில் வீரம் பேசியவர்கள். என்ன எதுக்கு என்று தெரியாமல் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என புலிகளின் பின்னால் போனவர்கள். பிரபாகரனின் படத்தை தலைக்குமேல் தூக்கி காவடியாட்டம் போட்டவர்கள். முள்ளிவாயக்காலில் தலைவர் மண்டையைப்போட்டவுடன் தலைவர் இன்னும் இருக்கிறார், சரியான நேரத்தில் வருவார். சிங்கள அரசிற்கு பாடம் படிப்பிப்பார் என கடந்த ஒரு வருடமாக காத்திருந்து காத்திருந்து காலத்தைப் போக்கியவர்கள். பிரபாகரன் வருவார் என பகிரங்க அறிக்கை விட்ட வைகோவும் நெடுமாறனும் நக்கீரன் பத்திரிகையும் இப்போது பம்மி விட்டார்கள்: புலிகள் அமைப்பும் உடைந்து ஒரு பகுதி இலங்கை அரசுடனும் இன்னொரு பகுதி புலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்கள் நிதிகளை கையகப்படுத்தியும் இந்த இழிச்சவாய் தமிழர்களுக்கு தண்ணி காட்டி விட்டார்கள். இன்னொன்று நாடுகடந்த தமிழீழம் தேர்தல் என நாடுநாடாக பிரதிநிதிகளை நியமித்து தமிழர்களுக்கு தமிழீழத்தை வெளிநாட்டில் உருவாக்கி விட்டோம் என அறிக்கைகள் விட்டாலும் தமிழர்கள் தங்கட அலுவல்களைப் பார்க்க வெளிக்கிட்டு விட்டனர்.
எது முன்னணியில் நிற்குதோ அதற்குப் பின்னால் சிந்திக்காமல் அலைவது தமிழர்கள் குணம் இப்படி தமிழர்கள் அலைந்ததன் பயனைத்தான் தற்போது சீரழிந்து உருப்படியான அரசியற் தலைமை இன்றி தமிழ்சமூகம் திண்டாடுகிறது. இந்த சீரழிந்த நிலமைக்கு வெளிநாட்டில் இருந்த இந்த விசுக்கோத்து தமிழர்கள்தான் முக்கிய காரணம் என்பதை உலகே அறியும். புலி காசு கேட்கும் போதெல்லாம் ஏனென்று கேட்காமல் காசைக் கொடுத்து விட்டு காசும் இல்லை தமிழீழமும் இல்லாமல் திரு திருவென்று முழிக்கிறது.
ஜூலை ஆகஸ்ட் மாத விடுமுறைக்கு கட்டார், எமிரட்ஸ், எயார் லங்கா என எல்லா எயார் லைன்சுகளிலும் ஒரு சீட் கிடைக்காத அளவிற்கு புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் காணி விலை கோடிக்கணக்கில் விலைபோகிறது. முன்பு போல் பலிகளுக்கு ஓமந்தையில் வரி கட்டவோ அல்லது வெளிநாட்டில் வாழ்ந்த காலங்களுக்கேற்ப லட்சக்கணக்கில் பணங்கட்டவோ தேவையில்லை. புலி என்கிற நாமமே அடியோடு அழிந்து போய்கிடக்கிறது. புலி என்று சொன்னாலோ சிறைவாசம் என்கிற அச்சம் அங்கு காணப்படுவதால் போர்த்திருந்த புலித்தோல்களை கழட்டிவிட்டு இலங்கைக்கு லைன் கட்டி போகின்றனர்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என புலிவால்கள் மீடியாக்களில் கத்திக்குளறினாலும் இனி தமிழர்களுக்கு காது கேட்காது. போங்கடா நீங்களும் உங்கட அரசியலும் என தமிழர்கள் நல்லூர் கந்தன், நயினை அம்மன், செல்லச்சந்நிதி முருகன், திருக்கேதீஸ்வரம், மடுமாதா என கிளம்பிவிட்டார்கள். அது சரி இலங்கைக்கு போகவேணாம் என்று குளறிய பல புலிகள்தான் ஏயார் லங்கா கவுண்டரில் முன்னுக்கு நின்றிருப்பார்கள்.
www.teavadai.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக