சாகர்: 600 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட 61 லாரிகளைக் காணவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நக்சலைட்கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியிலிருந்து இந்த வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
மொத்தம் 61 லாரிகளில் 600 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லையாம்.
இதுகுறித்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத்யாய் கூறுகையில், உரிய உரிமங்ககளுடன் வந்த லாரிகளில்தான் இந்த வெடிபொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.
இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டவையாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அடக்கம்.
இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடிபொருட்களை அந்த நிறுவனத்திற்கு அனுப்பினர் என்பது தெரியவில்லை.
கணேஷ் வெடிபொருள் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலிருந்துதான் டெலிவரி செய்யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு செய்தது: 14 Aug 2010 3:02 am
குண்டு ஒண்ணு வெக்கப் போறோம், 62 லாரி குண்டு பல வெக்கப் போறோம். வேட்குண்டு என்றால் எமது இனம் எமது இனம் என்றால் வெடிகுண்டு. நாங்கள் நாங்கள் உள்ள தேசத்தை விட மதத்தை அதிகமாக நேசிக்கிறோம். ஆகையால் தான் எம்மதத்தவரான எதிரி நாட்டுக்கு குடை பிடிக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக