கனடா மிகவும் மனிதாபிமானம் உடைய நாடு. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது கனடாவில்தான் மிக அதிகமான அளவில் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு வருகின்றது. கனடாவை வந்தடைந்து அரசியல் தஞ்சம் கோருவோரில் 50 சதவீதம் ஆனவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்து விடும். ஆனால் ஏனைய நாடுகளில் 15 சதவீதம்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
எனவே கனடாவுக்கு வருபவர்கள் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கான வாய்ப்புக்கள் ஏராளம். உதாரணமாக அகதி அந்தஸ்து கோரி 2003ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றிருந்த ஈழத் தமிழரில் 2 சதவீதத்தினருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல ஜேர்மனியில் 4 சதவீதமானோருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டிருக்கின்றது.
ஆனால் கனடாவில் 76 சதவீதமானோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே கனடா இந்த அகதிகளுக்கு பொன் முட்டை இடும் வாத்து மாதிரியாகும். அத்துடன் அகதிகள் என்று சொல்லி வருபவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ள அரச செலவில் சட்டத்தரணிகளின் சேவை பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
அதே போல இலவச சுகாதார நலன்புரி சேவைகள் வழங்கப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு வருகை தருகின்றமையை பெரிதும் விரும்புகின்றமைக்கு இன்னொரு பிரதான காரணியும் உண்டு. பல வருடங்களாக கனடாவில் கணிசமான தொகையில் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக