ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

தவிக்கும ்நடிகர் நடிகைகள, போலி பெயர்களில் “வெப்சைட்” இண்டர்நெட்

நடிகர், நடிகைகள் பெயரில் இண்டர்நெட்டில் நடக்கும் மோசடிகள் திரையுலகினரை கலக்கமடைய செய்துள்ளது. இணைய தளங்களின் அபார வளர்ச்சி நடிகர், நடிகைகளை அதன் பால் ஈர்த்துள்ளது. ஒவ்வொருவரும் அவற்றில் பேஸ் புக் வைத்துள்ளனர். டூவிட்டருக்கும் சென்றுள்ளனர். அவற்றில் தாங்கள் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்கள் ஸ்டில்கள் போன்றவற்றை போட்டு வைக்கின்றனர்.
 
ஆனால் மோசடி ஆசாமிகள் நடிகர், நடிகைகளின் போலி பெயர்களில் இணைய தளங்களில் புகுந்து ரசிகர்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்கின்றனர். போலிகளை உண்மை என நம்பி ரசிகர்களும் தகவல்களை பறிமாறிக் கொள்கின்றனர்.
 
சமீபத்தில் திரிஷா பெயரில் மர்ம நபர் போலி வெப்சைட் உருவாக்கி அவர் பற்றிய விவரங்களையும் படங்களையும் போட்டு வைத்தார். இதுபற்றிய தகவல் திரிஷாவுக்கு வந்ததும் உஷாராகி அது போலி என்று பகிரங்கப்படுத்தினார். சூர்யா, தனுஷ் பெயர்களிலும் போலி வெப்சைட் செயல்படுகிறது. இதற்காக தனுஷ் கண்டன அறிக்கையே வெளியிட்டார். திவ்யா பந்தனா பெயரிலும் மோசடி நடந்துள்ளது. மேலும் பல நடிகர், நடிகைகள் பெயர்களில் போலி வெப்சைட்கள் செயல் படுகின்றன. இதனால் அவர்கள் தவிப்பில் உள்ளனர்.
 
இந்த மோசடிகளை தவிர்க்க பல நடிகர், நடிகைகள் அதிகார டூவிட்டரில் முகவரி உருவாக்கியுள்ளனர். ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சிம்பு, நமீதா, ஜெனிலியா, வெங்கட் பிரபு, ஏ.ஆர்.¢ ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அமீர்கான் போன்றோர் குவிட்டரில் இருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமாக தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது என்றார் நமீதா.

கருத்துகள் இல்லை: