திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் கெடு! மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு

அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் கெடு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மனோ கணேசனின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு அதிகாரபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரபா கணேசன் எம்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், இந்த அரசாங்கம் பாராளுமன்றத்திலே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும் வகையில் வாக்களிப்பு உட்பட எந்தவித, நடவிக்கையிலும் பிரபா கணேசன் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தற்சமயம் பிரபா கணேசனின் கட்சி அங்கத்துவம் ஜனநாயக மக்கள் முன்னணியின் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு தலைவர் மனோ கணேசனினால் பொதுச் செயலாளரின் தலைமையில் அரசியற்குழு உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய ஒழுக்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபா கணேசன் எம்.பி. தொடர்பிலான ஒழுக்காற்று குழுவிலே பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாண சபை உறுப்பினர்கள் எஸ். ராஜேந்திரன், வி. முரளிரகுநாதன், கங்கைவேணியன், ஏ.ஜெயபாலன், ஜோசப் ஜேக்கப், எப்.எம்.ஷியாம், வி.முரளிதரன், லே. பாரதிதாசன் மற்றும் எம். ராஜ்குமார் ஆகியோர் தலைவர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் கட்சியின் தலைவரினாலும் பொதுச் செயலாளரினாலும் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவுகளை அங்கீகரிப்பதற்காகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவின் அவசரக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கட்சி தலைவர் மனோ கணேசனின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: