செரின மீது ஜெயலலிதா அரசினால் பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. செல்வி சேரின் சசிகலாவின் கணவர் நடராஜனின் காதலி என்றும் அவரிடம்தான் ஜெயலலிதா சசிகலா வகையராகளின் பணம் முடங்கி உள்ளதாகவும் பேசப்பட்டது.அப்பணத்தை வெளிக்கொணரும் முகமாகத்தான் இந்த பொய்வழக்கு போடப்பட்டதாகவும் பேசப்பட்டது தெரிந்ததே
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கஞ்சா வழக்கில் விடுதலையான செரினா பானுவிடம் வருமான வரி பிடித்தம் போக ரூ.30 லட்சத்து 35,117 ரொக்கமும், 21 லட்சம் தொகைக்கான வட்டிப் பத்திரமும் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை, தாசில்தார் நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் செரினா பானு. இவரையும், இவருடைய தாயார் ரமீஜா பானு, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரையும், கடந்த 2003-ம் ஆண்டில் 30 கிலோ கஞ்சா கடத்தியதாக காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து அப்போது 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 21 பவுன் நகைகளும், கார் ஒன்றும் கருப்பாயூரணி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், செரினா பானு, அவரது தாயார் உள்பட 3 பேரையும் மதுரை நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்நிலையில், செரினா பானுவிடம் இருந்து கைப்பற்றிய பணத்துக்கு வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, அந்தப் பணத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வருமான வரித் துறையினர் மதுரை நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், செரினா பானுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துடன் அதற்கான வட்டித் தொகையைக் கணக்கிட்டு, வருகின்ற மொத்தப் பணத்தில் இருந்து ரூ.97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாயை வருமான வரிக்காக எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தை செரினா பானு வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
இதுதவிர, செரினாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கார், தங்க நகைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் காவல்துறையினர் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில மாதங்களாக பணம் திருப்பி ஒப்படைக்கப்படாததால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருமான வரி பிடித்தம் போக மீதப் பணத்தையும், கார் உள்ளிட்ட பொருள்களையும் தரக் கோரி, செரீனா தரப்பில் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) பாண்டுரங்கன், வருமான வரி பிடித்தம் போக உள்ள ரூ.30 லட்சத்து 35,117 ரொக்கம், 21 லட்சத்துக்கான வட்டிப் பத்திரம், கார் சாவி, பாஸ்போர்ட் ஆகியவற்றை செரினா பானுவிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினரிடமிருந்து வரத் தாமதமானதால் நகைகள் மட்டும் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிகிறது. செரினா பானுவுடன் அவரது வழக்கறிஞர்கள் கனகராஜ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக