வெள்ளி, 4 ஜூன், 2010

ஹிந்திக்குக்வாய்ப்பை எதிர்பார்த்து ,நடிகர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களிடம் தமது கலையை அடகு

தமிழகத்திலுள்ள சில சில்லறைகள் தமிழீழம் எனவும் இலங்கைத் தமிழ்மக்களுக்காக போராட்டம் நடாத்துவதாகவும் போர்த்திக்கொண்ட போர்வையினுள் புலம்பெயர் புலி ஆதரவு பயங்கரவாதிகளின் பணம் அவர்களின் அன்றாட வாழ்வை வழமாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழக நடிகர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களிடம் தமது கலையை அடகு வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்படத் தயாரிப்பாளர்கள் ஹிந்திப் படங்களை தயாரிப்பதற்கான வழிவகைகளை தற்சமயம் நாடுகின்றனர்.
அதற்கமைய அஜித்தின் “அசல்’ படத்துக்குப் பின் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சரண். இதற்காக சல்மானிடம் கதை சொல்லியிருக்கிறார். சல்மானின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது சரண் தரப்பு.
இதே போல் “கந்தசாமி’ படத்துக்குப் பின் சுசிகணேசனும் தன்னுடைய “திருட்டுப் பயலே’ படத்தை ஹிந்திக்குக் கொண்டு செல்கிறார். இதற்காக சில முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சு நடக்கிறது. இயக்குநர் மாதேஷ் “அரசாங்கம்’ படத்தை ஹிந்தியில் முடிக்கும் தருவாயில் உள்ளார்.
பிரபுதேவா சிலரிடம் கதை சொல்லி காத்திருக்கிறார். தமிழில் இயக்கும் படம் முடிந்த பின் பிரபுதேவாவின் ஹிந்திப் படம் தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை: