திங்கள், 31 மே, 2010

நவநீதம்பிள்ளை போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்துச் சர்வசர்வதேச மட்டத்திலான விசாரணை

இலங்கையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய சர்வதேச மட்டத்திலான விசாரணை அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு இன்று வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளவை வருமாறு:
“இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்துச் சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் அவசியம். கடந்த கால அநுபவங்கள்,எமக்குக் கிடைக்கின்ற செய்திகள் ஆகியவற்றை கருத்தில் கொள்கின்ற போது இலங்கையின் உள்நாட்டு விசாரணையைக் காட்டிலும் சர்வதேச விசாரணைகளே சிறப்பான தெரிவாக இருக்கும். பாதிக்கப்பட்டிருக்கும் தரப்பினருக்கு சர்வதேச விசாரணைகள் மூலமாகவே நீதியும், நிவாரணமும் கிடைக்கின்றமை சாத்தியமாகும்.
இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணையின் மேல் தான் உள்நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தரப்பினருக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இப்போதே இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.அப்போது தான் இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதியான முறையில் கட்டியெழுப்ப முடியும்.

கருத்துகள் இல்லை: