வியாழன், 3 ஜூன், 2010
இலங்கைக்கு வந்த யாழ் சுண்ணாகத்தைச் சேர்ந்த 28வயதான கைதுசெய்யப்பட்டு 4ம் மாடியில்
மத்தியகிழக்கு நாடான டோகா கட்டாறிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறிலங்கன் விமானமூலம் இலங்கைக்கு வந்த யாழ் சுண்ணாகத்தைச் சேர்ந்த 28வயதான ரட்னம் மயூரன் என்பவர் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 6 வருடங்களாக கட்டாறில் வேலை செய்துவிட்டு இலங்கை திரும்பிய வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பலபேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும்வேளைகளில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் கொலண்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பதிவுத்திருமணம் செய்துவிட்டு மீண்டும் கொலண்ட் திரும்பும்போது இன்னொருவர் கைதுசெய்யப்பட்டு 4ம்மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜேர்மனியில் இருந்து சென்ற பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து செல்வோரை புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கைதுசெய்து உடன் 4ம் மாடிக்கு அனுப்பப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக