சனி, 5 ஜூன், 2010

அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கு ் போட்டியிடும் இந்தியப் பெண் ுமீது பாலியல் புகார்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் இந்தியப் பெண் நிக்கி ஹாலே மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

அவருக்கும் வில் போக்ஸ் என்ற பேராசிரியருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகதகவல்கள் வெளியாகின. அந்த குற்றச்சாட்டை நிக்கி கடுமையாக மறுத்தார்.

இந்த நிலையில், மற்றொரு செக்ஸ் புகார் கிளம்பி உள்ளது. தெற்கு கரோலினா மாகாணத்தில் எம்.பியாக இருக்கும் லாரி மெர்ச்சண்ட் என்பவர், கடந்த 2008ம் ஆண்டில் ஒரு நாள் இரவு மட்டும் என்னுடன் நிக்கி இருந்தார். சால்ட் லேக் சிட்டி என்ற இடத்தில் இருவரும் தனிமையில் இருந்தோம் என குண்டைப் போட்டுள்ளார்.

இருப்பினும் இதற்கான ஆதாரத்தை அவர் வெளியிடவில்லை.
இதுகுறித்து நிக்கி கூறுகையில், என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முறியடிக்கவே இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்று மறுத்துள்ளார்.

நிக்கிக்கு 38 வயதாகிறது. அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் செக்ஸ் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிக்கியின் கணவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகிறார். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையே அமெரிக்க தேசிய அறிவியல் கழக இயக்குநராக இந்திய அமெரிக்க என்ஜீனியரான சுப்ரா சுரேஷை நியமிக்கவுள்ளதாக அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

புகழ் பெற்ற மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் டீனாக இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார் சுரேஷ். இவரது நியமனத்தை செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர் அவரது நியமனம் அமலுக்கு வரும்.

அமெரிக்காவின் தேசிய சுகாதார கழகத்தின் அறிவியல் பிரிவுதான் தேசிய அறிவியல் கழகம். இது அரசு நிறுவனம்.

சுப்ரா சுரேஷ் சென்னை ஐஐடியில் படித்தவர். 1979ம் ஆண்டு அயோவா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை டிகிரியைப் பெற்றார். பின்னர் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் டாக்டர் படிப்பை முடித்தார்.

கருத்துகள் இல்லை: