உண்ணாவிரத நிலையை இத்துடன் முடித்துக்கொள்ளவேண்டும், தொடருமேயானால் மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்படுவீர்கள் என்று மலேசியா முகாமில் உண்ணாவிரதம் இருப்பவர்களை ஐ.நா. அதிகாரிகள் மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வெளியான இந்திய இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மலேசியா முகாமில் தொடர்ந்து 7ஆவது நாளாக உண்ணா விரதம் இருந்து வரும் ஈழத்தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக உள்ளது. முதல் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு மருத்துவ உதவிகள் செய்த, முகாம் அதிகாரிகள் பின்னர் மருத்துவ உதவிகளையும் மறுத்து விட்டனர்.
அதனால் இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை கேட்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், மலேசிய அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை. மனித உரிமை ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் ஈழத் தமிழர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அவர்கள் உலகத் தமிழரிடம் கோரிக்கை எழுப்பியவாறே இருக்கிறார்கள். ஐ.நா.வின் அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
ஏழு நாட்களுக்குப் பின்னர், திங்கட்கிழமை சந்தித்த ஐ.நா.வின் அகதிகளுக்கான 5 அதிகாரிகள் உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததுடன், கவலைக்கிடமாக இருப்பவர்களையும் பார்க்ககூட இல்லை. இதனால் உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா விரதத்தை முடித்துக் கொள்வதில்லை. இப்படியே எங்கள் உயிர் போனாலும் போகட்டும் என்கின்றனர்.
முக்கிய குறிப்பு:
ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காகவென்று இயக்கம் துவங்கி ஈழத்தமிழனின் காசில் கட்சி நடத்தி பிழைப்பு நடத்திய ,பழ.நெடுமாறன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலர் தா.பாண்டியன், பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி போன்றோர் மலேசியாவில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நமது ஈழத்தமிழனை காப்பாற்றுவதற்காக தீக்குளிக்காவிட்டாலும் ஆகக்குறைந்தது கறுப்புகொடி பேரணியாவது நடத்துவார்களா?? புலிகள் உயிருடன் இருக்கும்போது ஈழத்தமிழருக்காக வாய்யிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டிருந்தார்களே!, இப்ப இவங்கள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக