இலங்கைக்கு எடுத்துவரப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சகல வரிகளையும் ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இதன்படி வெளிநாட்டு நாணயங்கள் மீதான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேசத்தை கட்டயெழுப்பும் வரி, வற்வரி, அடங்கலான 22% வீத வரிகள் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதிக வரி காரணமாக வர்த்தக வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வருவதை மட்டுப்படுத்தியுள்ளன. இதனால் சட்டவிரோதமாக நாயணங்களை தருவிப்பது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனாலே குறித்த வரிகளை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக