ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் –இணைப்பு ஏற்படுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை மக்களின் அழுத்தம் தந்துள்ளது. இரண்டு தரப்பும் மீண்டும் இணைந்து செயற்பட பேச்சுக்கள் நடத்தும் போது கீழ்க்காணும் விவகாரங்களை தற்போது பணியாற்றும் ஊடகவியாளாலர். தொழில்நுட்பவியலாளர்கள். கலைஞர்கள் சார்பில் விவாதிக்கப்பட வேண்டும்.
படித்தவர்களும். பண்பான குணம் உள்ளவர்களுமான ரி.வி.ஐ. நிர்வாகிகள் தாயக விடுதலைக்காக தமது முதலீட்டையும் நேரத்தையும் செலவளித்து உருவாக்கியதே இந்தத் தமிழ் ஊடகம் என்பதை பணியாளர்கள் சகலரும் தெளிவாக அறிவோம். எனவே ரி.வி.ஐ முதலீட்டாளர்களின் கோரிக்கையான இந்த ஊடக நிறுவனங்களை trustee company யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் முழுமனதோடு ஏற்கிறோம்.
உள்வீட்டுப் பிரச்சினையை நான்கு சுவர்களிற்குள் தீர்க்காமல் மக்களிடையே விசமத்தனமான அறிவித்தலாக எடுத்துச் சென்று. ஒன்றாகப் பணிபுரிபவர்களை. சக நண்பர்களை. துரோகிகள் என்று குறிப்பிட்ட செயலின் மூலம் தான் இந்தப் பதவிக்கு அனுபவமோ. தகுதியோ இல்லாத ஒருவர் என்பதை சி.எம்.ஆர். சி.ரி.ஆர் பணிப்பாளர் நிரூபித்துவிட்டார். எனவே அவரிற்கு எதிராக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்களாகிய எங்களது நலன்கள் நோக்கப்படாமலே ரி.வி.ஐ சம்பந்தமாக விசமத்தனமான வானொலி அறிவித்தல் ஒரு பகுதியால் விடப்பட்டது. எங்களைத் துரோகிகளாக்கும் வகையிலமைந்த அந்த அறிவித்தலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்களே. எனவே மீண்டும் இணைவது சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது எங்கள் சார்பில் ஆகக்குறைந்தது மூவர் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். சி.ரி.ஆரில் ஒலிபரப்பப்பட்ட அறிவிததலைக் கீழே இணைத்துள்ளோம். இன்றுவரை ஒன்றாக பணிபுரியும் எமக்கு ஒருவரின் கீழ்த்தரமான அறிவித்தல் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஒரு இதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நிர்வாகத்துடனான பிணக்கிற்காக தனியார் பாதுகாப்புத்துறையை கட்டடத்திற்கு வரவழைத்து அவர்கள் மூலம் எம்மை எமது வேலைத் தளத்திலிருந்து வெளியேற்ற முயன்ற சி.எம்.ஆர். சி.ரி.ஆர் பணிப்பாளர் அச்சமயம் வேலை செய்து கொண்டிருந்த 12 பேருக்கும் ஏற்படுத்திய உயிர்ப் பயத்திற்கும். மன உலைச்சலிற்கும் தகுந்த நஸ்டஈடு தர நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் பாதுகாப்புத் துறை தவிர ஏம்மைக் கட்டத்தை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதற்காக கொண்டு வரப்பட்ட “இளையோர்கள்” இனி இவ்வாறான நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி நாங்கள் தொடர்ந்து இச் சம்பவம் நடந்த அந்த இரவு முழுவதும் பணியாற்றியது எவ்வளவு பயத்தையும். மன உளைச்சலையும் தந்திருக்கும் என்பதை நீங்கள் உணர முடியும்.
வேறு அமைப்புக்களைச் சார்ந்த மூன்றாம் நபர்களின் தலையீடு பணியாளர்களோடு தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான நபர்கள் ஊழியர்களுடன் நேரடியாத் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் வகையிலான அலுவலக ஒழுக்கக் கோவையொன்று உருவாக்கப்பட்டு ஊழியர்கள் அனைவருக்கும் அது வழங்கப்பட வேண்டும்.
நாங்கள் பணியாளர்களின் நலன்களை பேணும் வகையில் அமைக்கும் பணியாளர்கள். தொழில்நுட்பவியலாளர்கள் நலன்புரி அமைப்பிற்கு எந்தவிதத் தடையுமின்றி இயங்க பரிபூரன ஒத்தாசை வழங்க வேண்டும். பணியாளர்களின் சம்பளக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்டு தகுதியற்ற சம்பள உயர்வுகள் நிராகரிக்கப்பட்டு மீள்நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
ஓன்றாரியோவில் சட்டம் வேலைத்தளங்களில் அழுத்தம். பயமுறுத்தல். அச்சுற்றுத்தல். உள ரீதியாக. உடல் ரீதியாக தொல்லைதருதல் போன்றவற்றைத் தடுக்கிறது. இச் சட்டத்திற்கு உட்பட்டதே எமது நிறுவனம் இயங்குகிறது என்ற எழுத்து மூல அறிவுறுத்தல் எமக்குத் தரப்பட வேண்டும். இந்தச் சட்டத்தை மதிக்காத நிறுவனங்கள் செயற்படும் அனுமதியை இழக்க நேரிடும் என்பதோடு. பெரிய நஸ்ட ஈட்டையும் தொழிலாளர்களிற்கு வழங்க வேண்டுமென்பதால் இதனை நிர்வாகத்தின் நன்மைக்காகவே தெரியப்படுத்துகிறோம்.
இன்றுவரை ஒன்றாக வேலை செய்யும் எங்களைப் பற்றியும். இந்த நிறுவனங்களைத் தொடங்குவதற்காக முதலீடு செய்து இன்றுவரை பொறுமையோடு இருக்கும் இரண்டு கருணை கொண்ட உள்ளங்களைப் பற்றியும் சி.எம்.ஆர் நிர்வாகியின் ஏவலில் வெளியிடப்பட்ட கருத்தைக் கேளுங்கள்.
இன்றுவரை இவர்களிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்களை ஒரு செக்கன் நேரத்தில் துரோகிகளாக்கிய இவர்கள் பற்றிய உண்மைகளை தமிழ்ப் பிரமுகர்கள் சார்பிலான ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரிக்க வேண்டும்.
-CTR,CMR,TVIபணியாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக