வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும் மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.
அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது.மோதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதை ஊக்குவிப்பதாக இந்த நடவடிக்கை அமையும். அதேவேளை சுங்கவரி 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக