சுறா படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ரூ 6 கோடியை நஷ்ட ஈடாக திரையரங்க உரிமையாளர்களுக்கு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் சுறா படம் தோல்வி அடைந்ததாகவும் அதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
சுறா படம் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே இந்த படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ.6 கோடியை திருப்பித் தர வேண்டும் என்றும் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆனால் விஜய் தரப்பில் எல்லாமே வெற்றி படங்கள் என்று கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினி, விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் படங்கள் தோல்வியடைந்த போது திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அது போல் விஜய்யும் நஷ்டஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
இழப்பீடு தராவிட்டால் இன்னும் 3 வாரங்களில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்றும் அறிவித்து உள்ளனர்.
விஜய் தற்போது காவல்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வேலாயுதம் என்ற படத்திலும், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.
நஷ்ட ஈடு வழங்காவிட்டில் இப்படங்களுக்கு எதிரான முடிவை செயற்குழுவில் எடுப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலும் விஜய் தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் செயற்குழு கூட்டத்துக்கு முன் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புவதாகவும், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ரூ.6 கோடி வரை நஷ்ட ஈடு தர விஜய் சம்மதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக